மிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை எட்டிய ஜியோ...!

சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல்லை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

news18
Updated: April 15, 2019, 11:09 AM IST
மிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை எட்டிய ஜியோ...!
ஜியோ நிறுவனம்
news18
Updated: April 15, 2019, 11:09 AM IST
கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 30 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாம் இடத்தை ஜியோ பெற்றுள்ளது.

4 ஜி டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசம் என்ற மிகப்பெரும் சலுகையுடன் கடந்த 2016-ம் ஆண்டு தொலைத்தொடர்பு சந்தைக்குள் நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ. குறுகிய காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களிடம் ஜியோ மிக வேகமாக சென்றடைந்தது.

படிக்க... ரூ.49 முதல் ரூ.594 வரையுள்ள JioPhone ரீசார்ஜ் திட்டங்கள் ஒரு பார்வை!


சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 170 நாட்களில் ஜியோ 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது. இந்நிலையில், 30 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ மிக வேகமாக குறுகிய காலத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

படிக்க.. '48 ஆண்டுகளுக்கு ஐ-பேட் லாக்-ஐ எடுக்க முடியாது’ - தந்தைக்கு ஆப்பு வைத்த 3 வயது குழந்தை!

30.4 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் உள்ளது. ஆனால், ஏர்டெல் இந்த சாதனையை செய்ய 19 ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்னும், சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல்லை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Loading...

Also See...

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...