தீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ!

Jio: பண்டிகை கால கொண்டாட்டமாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ஜி.பி கூடுதலாக டேட்டா வழங்குகிறது.

Web Desk | news18
Updated: October 29, 2018, 4:23 PM IST
தீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ!
ஜியோ
Web Desk | news18
Updated: October 29, 2018, 4:23 PM IST
வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆக்டிவ்-ல் இருக்கும் பிளானுடன் கூடுதலாக 10 ஜி.பி டேட்டாவை தினசரி 2 ஜி.பி வீதம் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாகப் பெறலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ, பண்டிகைக்கால சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ‘செலிப்ரேஷன் பேக்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளானில் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 ஜி.பி டேட்டாவைப் பெறலாம். ஏற்கனவே உங்களுக்கு அளிக்கப்படும் டேட்டா தவிர, கூடுதலாக தினமும் 2 ஜி.பி வீதம் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ளானை நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு மொபைல் போனில் மை ஜியோ (My Jio) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் உள்ளே சென்றதும் உங்களது இருப்புத்தொகை, டேட்டா பயன்பாடு, ஏற்கனவே ஆக்டிவ் செய்யப்பட்டுள்ள பிளான் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.

மை ப்ளான் (My Plan) என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், ‘செலிப்ரேஷன் பேக்’ உங்களுக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதா? என்பது காட்டப்படும். இது தவிர புதிதாக புத்தாண்டு பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிளானில் ஆண்டுக்கு 547 ஜி.பி டேட்டா ரூ.1699 விலையில் கிடைக்கிறது. கூடுதலாக, ரூ.100-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகித கேஷ்பேக் ஆஃப்பர் வழங்கப்படுகிறது. இந்த ப்ளான் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்..

17 தங்கப் பதக்கம், அர்ஜுனா விருது வாங்கிய பாக்ஸர் குல்பி ஐஸ் விற்கும் அவலம்!
Loading...
கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை பணி: சீரமைத்த பொதுமக்கள்-இளைஞர்கள்

Also See..

First published: October 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...