ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதகாவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய தேசமாக மிளிரும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவ்ர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனம் சார்பில் பேஸ்புக்கை நீண்டகால பங்குதாரராக வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் அனைவரும் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் துறை வளர்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உடன் இணைந்து செயல்படுவோம்.
இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்போம். உலக அளவில் இந்தியா டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதகாவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய தேசமாக மிளிரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வாட்ஸ்அப் உடன் இணைந்து ஜியோ மார்ட்-ன் வணிக தொடர்பை விரிவுபடுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இந்த வர்த்தக முயற்சி வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube