ஒரே மாதத்தில் புதிதாக இணைந்த 85 லட்சம் வாடிக்கையாளர்கள்! உற்சாகத்தில் ஜியோ

வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது ஜியோ டெலிகாம் நிறுவனம்.

Web Desk | cricketnext
Updated: February 21, 2019, 12:35 PM IST
ஒரே மாதத்தில் புதிதாக இணைந்த 85 லட்சம் வாடிக்கையாளர்கள்! உற்சாகத்தில் ஜியோ
(File photo)
Web Desk | cricketnext
Updated: February 21, 2019, 12:35 PM IST
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக ஜியோ உடன் இணைந்துள்ளனர்.

இந்திய டெலிகாம் துறையைப் பொறுத்த வரையில் முன்னோடி நிறுவனமாக ஜியோ நிறுவனம் உயர்ந்து வருகிறது. வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது ஜியோ டெலிகாம் நிறுவனம்.

கடந்த புதன்கிழமை வெளியான ட்ராய் அறிக்கையின் அடிப்படையில் 2018-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனத்தோடு புதிதாக 85.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் ஜியோ நிறுவனம் 28.01 வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. ட்ராய் அறிக்கையின் அடிப்படையில் ஜியோ நிறுவனத்தின் மாதாந்திர வளர்ச்சி 0.36 சதவிகிதமாக உள்ளது.


இதே 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்போது 41.87 கோடி ஆக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 34.03 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது.

மேலும் பார்க்க: நேற்றிரவு வானில் தெரிந்த சூப்பர் மூன் - ரசித்த பொதுமக்கள்
First published: February 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...