Reliance AGM: 5ஜி போன், ஜியோ லேப்டாப்- உற்று நோக்கவைக்கும் ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம்!

கோப்புப் படம்

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகரித்துள்ள நிலையில், இதற்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மலிவு விலை மடிக்கணினியை ரிலையன்ஸ் வெளியிடக்கூடும் என்று எச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • Share this:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44-வது வருடாந்திர பொதுக் கூட்டம் நாளை 24 ஜூன் 2021 நடக்க இருக்கிறது.  இந்த கூட்டத்தில் எத்தகைய அறிவிப்புகள் வரும் என அனைவரும் உற்று நோக்கியுள்ளனர்.

இந்தியாவில் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  லிமிடெட் திகழ்கிறது. இதன், 44வது வருடாந்திர கூட்டம் நாளை நடைபெறுகிறது. ரிலையன்ஸ் வருடாந்திர பங்குதாரர் சந்திப்பு பல தசாப்தங்களாக முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரால்  உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 3 ஆயிரம் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு  ஆன்லைன் முறையில் நடைபெற்ற ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தை 42 நாடுகள், 468 நகரங்களில் இருந்து 3 லட்சம் பார்வையாளர்கள் பார்த்தனர்.  அதில் இருந்தே ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்திற்கு உள்ள எதிர்ப்பார்ப்பை அறிந்துகொள்ளலாம்.

நாளை நடைபெறவுள்ள 44வது வருடாந்திர கூட்டத்தில், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் போன்றவற்றை குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளது.  இந்த  வருடாந்திர கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய 5 ஜி ஸ்மார்ட் போன் மீது அனைவரும் கவனமும் குவிந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தின்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி,  இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5 ஜி சேவையை தொடங்க உதவும் வகையில் புதிதாக ஒரு முழுமையான 5ஜி தீர்வை ஜியோ கண்டுள்ளதாக தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளுக்கு ஜியோ 100 சதவீதம் உறுதியளித்தது.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 5ஜி தீர்வு, 5ஜி அலைக்கற்றை கிடைத்ததும்  சோதனைகளுக்கு தயாராக இருக்கும் என்றும் அடுத்து ஆண்டு சந்தைபடுத்துதலுக்கு தயாராக இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.  இந்திய சந்தையில் ஜியோ 5ஜி திறன் நிரூபிக்கப்பட்ட பின்னர்,  சர்வதேச அளவில் உள்ளபிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜியோ 5ஜி ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் இந்த வருடாந்திர கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மலிவு விலையில் மடிக்கணினியையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகரித்துள்ள நிலையில், இதற்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மலிவு விலை மடிக்கணினியை ரிலையன்ஸ் வெளியிடக்கூடும் என்று எச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னதாக ஜூன் 14ஐ  நடப்பு நிதியாண்டுக்கான ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக  ரிலையன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. வருடாந்திர கூட்டத்தில்  இது தொடர்பாக அறிவிக்கப்பட்டால், கூட்டம் முடிந்த ஒரு வார காலத்திற்குள் ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Published by:Murugesh M
First published: