Home /News /technology /

Jio Entertainment bonaza |14 OTT சேவைகளுடன் புதிய பிளான்கள் - ரூ.399 இல் இருந்து அறிமுகம் செய்யும் ஜியோ ஃபைபர்

Jio Entertainment bonaza |14 OTT சேவைகளுடன் புதிய பிளான்கள் - ரூ.399 இல் இருந்து அறிமுகம் செய்யும் ஜியோ ஃபைபர்

தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 தொடங்கி பல்வேறு திட்டங்களை ஓடிடி ஆப் சேவை வசதிகளுடன் வழங்கவுள்ளது.

தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 தொடங்கி பல்வேறு திட்டங்களை ஓடிடி ஆப் சேவை வசதிகளுடன் வழங்கவுள்ளது.

தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 தொடங்கி பல்வேறு திட்டங்களை ஓடிடி ஆப் சேவை வசதிகளுடன் வழங்கவுள்ளது.

    இன்டெர்னெட் பிராட்பிராண்ட் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பைபர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

    'என்டெர்டெயின்மென்ட் போனசா' என்ற பெயரில் இந்த புதிய சேவையை வழங்கும் ஜியோ பைபர் நிறுவனம், இதில் அதிவேக இணைய சேவையுடன் ஓடிடி தளங்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் வசதியையும் வழங்கவுதாக தெரிவித்துள்ளது.

    ரூ.399க்கு இந்த பேக்கின் சப்ஸ்கிரிப்ஷன் தொடங்குகிறது. கூடுதலாக ரூ.200 செலுத்தினால், 14 ஓடிடி தளங்களின் சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த புதிய சேவை திட்டம் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் செயலுக்கு வரும் எனவும், தற்போதைய ஜியோ பைபர் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை மை ஜியோ செயலியை பயன்படுத்தி பெறலாம்.

    இதையும் படிங்க: வேகமான 4ஜி சேவையில் ஜியோ தொடர்ந்து முதலிடம் - TRAI தகவல்

    செட் ஆப் பாக்ஸ் இல்லாத தற்போதைய ஜியோ பைபர் வாடிக்கையாளர்கள் பிரீ செட் ஆப் பாக்ஸ் பெற மை ஜியோ அப்பில் அப்பாயின்ட்மெட் ஷெட்யூல் செய்து கொள்ளலாம். இந்த வசதி தற்போதைய ஜியோ பைபர் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையளர்கள் இருவருக்கும் உண்டு.

    புதிய சேவை திட்டங்கள் பட்டியல்


    புதிதாக இந்த திட்டதில் சேர விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை

    1. புதிய போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 செலுத்தி இன்டெர்னெட் பாக்ஸ், செட் ஆப் பாக்ஸ் மற்றும் இன்ஸ்டாலெஷன் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

    2. அன்லிமிடெட் என்டெர்டெயின்மென்ட் திட்டம் மூலம், வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.399 திட்டத்தில், கூடுதலாக ரூ.100 அல்லது ரூ.200 மாதம் செலுத்தி 14 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    3. இந்த அன்லிமிடெட் என்டெர்டெயின்மென்ட் திட்டத்தில் கீழ் கண்ட ஓடிடி தளங்களை பெரிய மற்றும் சிறிய திரைகளை (பல டிவைஸ்களிலும்) பயன்படுத்திக்கொள்ளலாாம்.

    Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema அகிய ஓடிடி செயலிகளை இந்த திட்டத்தில் பயன்படுத்தலாம்.

    மாதம் ரூ.399 தொடங்கி ரூ.3,999 வரை இந்த அன்லிமிடெட் பேக் சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்ச திட்டமான ரூ.3,999இல் 1000 mbps வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Jio Fiber

    அடுத்த செய்தி