வால்மார்ட்டுக்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஆப்பிள், கூகுள், சாம்சங், சியோமி மற்றும் பல பிராண்டுகளின் ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போன்களை (Refurbished smartphones), அதாவது புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை தனது பிளாட்ஃபார்மில் பட்டியலிடப்படுவதற்கு முன்பு 47 தர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
அறியாதோர்களுக்கு இங்கே 'ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போன்கள்' என்றால் தரம் மற்றும் செயல்பாட்டிற்காக முழுமையாக சோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் அதன் சில பாகங்கள் மாற்றப்பட்ட அல்லது சரிசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்று அர்த்தம்.
அப்படியான பிளிப்கார்ட்டின் ரீஃபர்பிஷ்டு ஸ்டோரில், ஆப்பிள் ஐபோன்கள் ரூ.9,999 முதலும், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ரூ.3,999 முதலும், சியோமி ஸ்மார்ட்போன்கள் ரூ.4,299 முதலும், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ரூ.9,998 முதலும் வாங்க கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டின் ரீஃபர்பிஷ்டு ஸ்டோரில் என்னென்ன ஆப்பிள், சாம்சங், கூகுள் மற்றும் சிசியோமி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன விலையில் வாங்க கிடைக்கின்றன என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
also read : OnePlus 9 RT 5G -யின் பவருடன் உங்கள் கேமிங் திறனை வெளிப்படுத்துங்கள்.!
ரீஃபர்பிஷ்டு ஆப்பிள் ஐபோன் மாடல்கள்:
பிளிப்கார்ட் தளத்தின் ரீஃபர்பிஷ்டு ஸ்டோரில் விற்கப்படும் மலிவான ஐபோன், முதல் தலைமுறை ஐபோன் எஸ்இ ஆகும், இதன் பிளாக் கலர் ஆப்ஷன் ரூ.9,950க்கும், ஒயிட் மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல ஐபோன் 6எஸ் (32ஜிபி) ரூ.11,999க்கும், இதன் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999க்கும் வாங்க கிடைக்கிறது. இங்கே ஐபோன் 7 பிளாக் கலர் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.14,499 ஆகும் மற்றும் ஐபோன் 7-இன் 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இறுதியாக, ஸ்பேஸ் கிரே நிறத்திலான ஐபோன் 8 (64ஜிபி) ஆனது ரூ.17,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரீஃபர்பிஷ்டு கூகுள் பிக்சல் மாடல்கள்:
கூகுள் பிக்சல் மாடல்களை பொறுத்தவரைக் பிளாக் மற்றும் ஒயிட் கலர் பிக்சல் 3ஏ (64ஜிபி) ரூ.9,998க்கு வாங்க கிடைக்கும். நாட் பிங்க் நிறத்திலான கூகுள் பிக்சல் 3 (64ஜிபி) ரூ.10,596 க்கும், அதே மாடல் ஒயிட் கலரில் ரூ.10,599க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜஸ்ட் பிளாக் நிறத்திலான பிக்சல் 3 (64ஜிபி) ரூ.10,989க்கும் மற்றும் அதே மாடலின் க்ளியர்லி ஒயிட் கலர் ஆப்ஷன் (128ஜிபி) ரூ.13,499க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
also read : புதிதாக அறிமுகமாகியுள்ள Bose QuietComfort 45 ஹெட்ஃபோன்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..
ரீஃபர்பிஷ்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்:
பிளிப்கார்ட் ரீஃபர்பிஷ்டு ஸ்டோரில் ரெட்மி 4ஏ (2ஜிபி ரேம் + 16ஜிபி) ரூ.4,989க்கும், ரெட்மி 3எஸ் ரூ.4,599 க்கும், ரெட்மி நோட் 6 ப்ரோ ரூ.8,899, மற்றும் ரெட்மி 6 ரூ.5,297க்கும் வாங்க கிடைக்கிறது. மேலும் ரெட்மி ஒய்2 ஆனது ரூ.6,389க்கும் மற்றும் எம்ஐ ஏ2 ஆனது ரூ.6,779க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உடன் ரெட்மி நோட் 7 ப்ரோவின் ரீஃபர்பிஷ்டு மாடல் ரூ.8,499க்கும் மற்றும் ரெட்மி 7 ஆனது ரூ.5,999க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது
also read : ஃபோன் மற்றும் மெசேஜ் ஆப்களை பயன்படுத்தி, ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..
ரீஃபர்பிஷ்டு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்:
2015ம் ஆண்டிலிருந்து சாம்சங்கின் கேலக்ஸி ஜே2 ஸ்மார்ட்போனின் ரீஃபர்பிஷ்டு மாடலின் விலை ரூ.3,999 ஆகவும், சாம்சங் ஆன்5 ப்ரோவின் (கோல்ட் கலர்) விலை ரூ.4,499 ஆகவும், அதே மாடலின் பிளாக் கலர் ஆப்ஷனின் (16ஜிபி) விலை ரூ.4,895 ஆகவும் உள்ளது. மேலும் பிளிப்கார்ட் தளத்தின் ரீஃபர்பிஷ்டு ஸ்டோரில் சாம்சங் கேலக்ஸி ஜே5 மாடல் ஆனது ரூ.4,789 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flipkart, Smartphone