பூமியைத் தவிர வேறு கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் மனிதன், சூரிய மண்டலத்தைத் தாண்டியும் போய்விட்டான். அதன் ஒரு படியாக உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்சிஜனை உருவாக்க தாவரங்களை விண்வெளியில் வளர்க்க மனித சமூகம் முயற்சித்து வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் செயற்கை முறையில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு பூக்களும் மலர்ந்தது. அதேபோல் இப்போது நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம்- நாசாவின் (NASA) ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டம் மூலம் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதையும், அங்கு நீண்ட காலம் தங்கும் வசதியை நிறுவ முயல்கிறது.
நாசாவின் இந்த திட்டத்தில் இப்போது ரெட் வயர் நிறுவனம் இணைந்துள்ளது. உயிர்கள் வாழ உணவு, ஆக்ஸிஜன் மற்றும் நீர் அவசியம். இந்த மூன்றையும் விண்வெளி சூழலில் நிலைப்படுத்த தாவரங்கள் உதவி செய்கிறது. இது நிலவில் முதன்முறையாக வணிக ரீதியிலான கிரீன்ஹவுஸ் உருவாக்கும் திட்டமாகும்.
அதனால் விண்வெளி மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்கும் வணிக ரீதியான கிரீன்ஹவுஸிங் ஆய்வுகளை ரெட் வயர் நிறுவனம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு செலுத்தப்படும் ஆர்ட்டெமிஸ் விண்கலத்தில் நிலவிற்கு தாவரங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. நிலவின் மண்ணிலேயே தாவரங்கள் வளர்க்க முடியுமா என்றும் ஆராய்ச்சி செய்து வருகிறது.
‘விண்வெளியில் முழுப் பயிர்களையும் வளர்ப்பது எதிர்கால விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் தாவரங்கள் உணவு, ஆக்ஸிஜன் மற்றும் நீர் மீட்பு ஆகியவற்றை வழங்குகின்றன," என்று கிரீன்ஹவுஸ் திட்டத்திற்கான ரெட் வயரின் மேலாளர் டேவ் ரீட் கூறினார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் நாசாவிற்குச் சொந்தமான மேம்பட்ட தாவர வாழ்விடத்தில் தாவர ஆய்வுகளை ரெட் வயர் நிர்வகித்து வருகிறது. ரெட் வயர் கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் செயலற்ற சுற்றுப்பாதை ஊட்டச்சத்து விநியோக அமைப்பு (PONDS) சாதனங்கள் தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப் பயன்படுத்தப் படுகிறது.
பூமி அல்லாத விண்வெளி பயன்பாட்டிற்கு-தகுதியான தாவர வளர்ச்சி தொழில்நுட்பத்தை ரெட் வயர் நிறுவனம் உருவாக்கி, மேம்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.