சியோமி நிறுவனத்தின் சப் பிராண்டான ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 22ம் தேதி புதிய ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனத்துக்கு இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் மிகப்பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் சியோமி நிறுவனம், செல்போன் மற்றும் டிவி மார்க்கெட்டில் புதிய பிராண்டுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் சப் பிராண்டான ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 22ம் தேதி புதிய அளவிலான ஸ்மார்ட் டீவிக்களை மார்க்கெட்டில் இறக்க உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவிக்கள் 32 மற்றும் 43 இன்ச் என இரண்டு அளவுகளில் வர உள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ இடம்பெற்றுள்ளன. டிடிஎஸ் வெர்ச்ஷூவல், சரவுண்ட் சவுண்ட் மற்றும் 20W ஆடியோ குவாலிட்டி, புதிய டிவியில் இடம்பெறும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் டிவி சந்தையில் ரெட்மி நிறுவனம் ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
எம்ஐ (MI), சியோமி நிறுவனத்தின் மற்றொரு பிராண்டு ஆகும். இந்த பிராண்டிலும் பல்வேறு டிவி மாடல்கள், டீவி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிராண்ட் முழுமையாக டிவி மார்க்கெட்டில் இருந்து விரைவில் வெளியேற இருப்பதால், அந்த இடத்தைப் பிடிக்க ரெட்மி மாடல்கள் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன.
ரெட்மி ஸ்மார்ட் டிவி தொடரில் விவிட் பிக்சர் எஞ்சின் (விபிஇ), சியோமியின் உள்-பட செயலாக்க தொழில்நுட்பம் உள்ளிட்டவை இருக்கும் என சில வெப்சைட்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த தொலைக்காட்சிகள் ஆன்டிராய்டு டிவி 11 வெர்சனை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. ப்ளூடூத் வி 5.0, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ஆட்டோ லேடென்சி மோட் போன்ற இணைப்பு விருப்பங்களையும் சியோமி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Also read... 12 மொழிகளில் லைவ் டிரான்ஸ்லேஷன் - ஜூம் செயலியின் அசத்தல் அப்டேட்!
விலையின் அடிப்படையில் பார்க்கும்போது அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் பட்ஜெட் டிவியாக இது இருக்கும். . 32 மற்றும் 43 இன்ச்களில் வெளியாகும் இந்த டிவிக்கள் குறைந்தபட்ச விலை 15 ஆயிரத்தில் இருந்து தொடங்கும். அதிகப்பட்ச விலை ரூ.30,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவியின் ஒட்டும்மொத்த தகவல்களும், ஸ்மார்ட் டிவி வெளியாகும் தேதிக்கு முன்னர் சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் உலகளவில் பல்வேறு பிராண்டுகளில் டிவிக்களை வழங்கி வருவதால், அதனை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட பிராண்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையிலேயே எம்ஐ நிறுவனத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களை நிறுத்தி, அந்த பிராண்டை முழுவதுமாக சந்தையில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Redmi