• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Android 11 கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி-க்கள் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Android 11 கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி-க்கள் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ரெட்மி ஸ்மார்ட் டிவி

ரெட்மி ஸ்மார்ட் டிவி

சிறந்த ஒலி வெளியீட்டை உறுதி செய்ய 43-இன்ச் மாடல் 20W ஆடியோ வெளியீட்டையும் , 32-இன்ச் மாடல் 30W ஆடியோ வெளியீட்டையும் வழங்குவதாக கூறப்படுகிறது.

  • Share this:
புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் "ஆல்-ரவுண்ட் என்டர்டெயின்மென்ட்" மற்றும் டால்பி ஆடியோ, IMDb இன்டக்ரேஷன் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் சப்போர்ட் உள்ளிட்ட இன்னும் பல நவீன அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டால்பி 5.1 சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை கொண்டு மற்றும் லேட்டஸ்ட் பேட்ச்வால் ஸ்கின்னில் இயங்குகின்றன. இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 இன்ச் & 43 இன்ச் என்ற 2 அளவுகளில் வருகின்றன.

மேலும் சியோமி நிறுவனம் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை ஒரு புதிய எம்ஐ ரிமோட் உடன் கொடுக்கிறது. இந்த டிவி ரிமோட்டில் இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் மற்றும் ஃபாஸ்ட் மியூட் மற்றும் ஃபாஸ்ட் வேக் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. தவிர இந்த 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டூயல் ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விரிச்சுவல்: எக்ஸ் வடிவங்களை "சரவுண்ட் சவுண்ட்"ன் சிறந்த அனுபவத்திற்காக வழங்குகின்றன. மேலும் சிறந்த ஒளி மற்றும் பார்வை அனுபவத்தை வழங்க விவிட் பிக்ட்சர் என்ஜின் (Vivid Picture Engine) மற்றும் இன்-ஹவுஸ் ப்ராசஸிங் டெக்னலாஜி (in-house image processing technology) உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த ஒலி வெளியீட்டை உறுதி செய்ய 43-இன்ச் மாடல் 20W ஆடியோ வெளியீட்டையும் , 32-இன்ச் மாடல் 30W ஆடியோ வெளியீட்டையும் வழங்குவதாக கூறப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 உள்ளமைக்கப்பட்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஆகும். இந்த 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி-க்கள், ஸ்டான்டர்ட் 60Hz ரெஃப்ரஷ் ரேட்மற்றும் ஃபுல்-ஹெச்டி ஸ்கிரீனை கொண்டுள்ளன. யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட், லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த டிவி மாடல்களின் ரிமோட்களில் கொடுக்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் வேக் அம்மசம் டிவி-யை 5 வினாடிகளுக்குள் இயக்க உதவும் என்று நிறுவன கூறுகிறது. கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்த வரை, வேகமான இன்டர்நெட் அனுபவத்தை உறுதி செய்ய MIMO தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் v5.0 மற்றும் டூயல் பேன்ட் Wi-Fi உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 2 ரெட்மி ஸ்மார்ட் டிவி-க்களும் Mali G31 MP2 GPU, 1GB ரேம் மற்றும் 8GB ஆன்-போர்ட் ஸ்டோரேஜுடன் , quad-core A35 CPU மூலம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Also read... 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்த அமேசான் - அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன?

32 இன்ச் மாடலின் விலை ரூ.15,999 , 43 இன்ச் மாடலின் விலை ரூ.25,999 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை விற்பனை துவங்கும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த 2 ஸ்மார்ட் டிவிகளும் அடுத்த மாதம் தொடங்கும் Mi மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் விழா விற்பனையுடன் தீபாவளியின் போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: