10,000mAh, 20,000mAh திறன்கள் கொண்ட ரெட்மி பவர் பேங்க் வெளியீடு..!

சீனாவில் வருகிற ஜூலை 23-ம் தேதி இந்த பவர் பேங்க் ரகங்கள் வெளியிடப்பட உள்ளன.

Web Desk | news18
Updated: July 20, 2019, 2:09 PM IST
10,000mAh, 20,000mAh திறன்கள் கொண்ட ரெட்மி பவர் பேங்க் வெளியீடு..!
ரெட்மி பவர் பேங்க்
Web Desk | news18
Updated: July 20, 2019, 2:09 PM IST
10,000mAh, 20,000mAh திறன்கள் கொண்ட ரெட்மி பவர் பேங்க் விற்பனையை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களையும் தாண்டி தனது எல்லையை விரிவு செய்ய விரும்பியுள்ள ஜியோமி நிறுவனம் புதிதாக அதிகத் திறன் கொண்ட பவர் பேங்க் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. 10,000mAh திறன் கொண்ட PB100LZM பவர் பேங்க் 590 ரூபாய்க்கும் 20,000mAh திறன் கொண்ட PB200LZM பவர் பேங்க் 991 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

சீனாவில் வருகிற ஜூலை 23-ம் தேதி இந்த பவர் பேங்க் ரகங்கள் வெளியிடப்பட உள்ளன. இரண்டு பவர் பேங்க் நிறங்களும் வெள்ளை நிற வெளிப்புறத் தோற்றத்துடனே விற்பனைக்கு வர உள்ளன. ஒரு மைக்ரோ யூஎஸ்பி மற்றும் யூஎஸ்பி டைப் C போர்ட் உடன் இந்த பவர் பேங்க் உள்ளது. சார்ஜ் நிலவரம் தெரிந்துகொள்ள எல்இடி லைட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.


குறைவான வோல்டேஜ், ரீசெட் பிரச்னைகளைத் தவிர்க்க பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக ரெட்மி தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றப்பட்ட இந்த பவர் பேங்க், ரெட்மி நோட் 7 ப்ரோ-க்கு 3.5 முறைகளும், Mi 9 ஃபோனுக்கு 5.3 முறைகளும் ரெட்மி K20 ஃபோனுக்கு 3.5 முறைகளும் ஐ-ஃபோன் XS-க்கு 4.8 முறைகளும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை ஆகும்.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...