விற்றுத்தீர்ந்த ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ... அடுத்த விற்பனைத் தேதி அறிவிப்பு!

ஜியோமி ரெட்மியின் முதல் 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ரெட்மி நோட் 8 ப்ரோ 14,999 ரூபாய் ஆகும்.

விற்றுத்தீர்ந்த ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ... அடுத்த விற்பனைத் தேதி அறிவிப்பு!
ரெட்மி நோட் 8 ப்ரோ
  • News18
  • Last Updated: October 22, 2019, 7:30 PM IST
  • Share this:
அக்டோபர் 21-ம் தேதியான நேற்று வெளியான  ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு போன்களும் ஒரேநாளில் ஸ்டாக் தீர்ந்து போனதால் இரண்டாம் கட்ட விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

mi.com மற்றும் அமேசான் இந்தியா விற்பனைத் தளங்களில் மீண்டும் ரெட்மி நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகிறது. இரண்டாம் கட்ட விற்பனை வருகிற அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகிறது. 4-ஜிபி மற்றும் 64 ஜிபி கொண்ட ரெட்மி நோட் 8 மாடல் 9,999 ரூபாய். 6 ஜிபி + 128 ஜிபி மாடல் 12,999 ரூபாய் ஆகும்.

ஜியோமி ரெட்மியின் முதல் 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ரெட்மி நோட் 8 ப்ரோ 14,999 ரூபாய் ஆகும். இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோட் 8 ப்ரோ மாடல் ஆகும். 128 ஜிபி மாடல் 15,999 ரூபாய் ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடனான மாடல் 17,999 ரூபாய் ஆகும்.


First published: October 22, 2019, 7:30 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading