சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 11 இந்தியாவில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த போன் இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜியாக அறிமுகமாகும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் ரெட்மி 11 சீரிஸ் நுழைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. மறுபுறம், சியோமி பிராண்டிங்கின் கீழ் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஆகியவற்றை சியோமி அறிமுகப்படுத்தும் என்றும் மற்றொரு வதந்தியும் வெளியானது.
மேலும் இந்த இரண்டு போன்களும் முறையே Xiaomi 11i மற்றும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் என இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 10T 5Gக்குப் அடுத்த பதிப்பாக Note 11T 5G இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில், Redmi Note 11T 5G ஆனது சீனாவில் அறிமுகமான Redmi Note 11 போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அறிமுகமான Redmi Note 11 5G ஆனது 6.6-இன்ச் முழு HD டிஸ்ப்ளேவுடன் 90Hz ரிஃப்ரெஷிங் ரேட்டுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 810 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள்ளக சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 33W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா உள்ளது. அதேபோல முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. விலையை பொறுத்தவரை Redmi Note 11 5G ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை CNY 1,199 (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14,000) ஆகும்.
Also read... வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 5 புதிய அப்டேட்டுகள்!
இதற்கடுத்ததாக, 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை CNY 1,299-ல் விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.16,400 இருக்கும். இதனை தொடர்ந்து 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை CNY 1,499 (அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 17,500) ஆகும்.
அந்த வகையில் ரெட்மி நோட் 11T 5ஜியின் விலை இந்தியாவில் ரூ.15,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிறுவனத்தின் நோட் சீரிஸ் பாரம்பரியமாக பட்ஜெட் சார்ந்த வாடிக்கையாளர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மேட் பிளாக், ஸ்டார்டஸ்ட் ஒயிட் மற்றும் அக்வாமரைன் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.