முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Redmi Note 11SE மொபைல் இந்தியாவில் அறிமுகம்.. சார்ஜர் அடாப்டர் இன்றி Redmi-ன் முதல் ஸ்மார்ட்போன்

Redmi Note 11SE மொபைல் இந்தியாவில் அறிமுகம்.. சார்ஜர் அடாப்டர் இன்றி Redmi-ன் முதல் ஸ்மார்ட்போன்

ரெட்மி

ரெட்மி

Redmi Note 11 SE | ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர் இல்லாமல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது புதிய Redmi Note 11 SE.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

xiaomi நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான Redmi Note 11 SE-ஐ ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய அறிமுகமான Redmi Note 11 SE மொபைலானது சார்ஜர் அடாப்டர் இன்றி ஷிப்பிங் செய்யப்பட உள்ள Redmi-யின் முதல் ஸ்மார்ட் போனாக உள்ளது.

இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே Xiaomi வெப்சைட் மற்றும் Flipkart-ல் பட்டியலிட்டப்பட்டு இருந்தது. இதில் Redmi Note 11 SE-ன் பாக்ஸில் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்ற லிஸ்ட்டில் USB type C கேபிள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கமாக புதிய மொபைல்களோடு கொடுக்கப்படும் சார்ஜிங் அடாப்டர் மிஸ்ஸாகி இருந்தது.

எனவே இந்த மொபைலின் பாக்ஸில் சார்ஜர் இருக்காது என்று ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர் இல்லாமல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது புதிய Redmi Note 11 SE. இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சார்ஜிங் அடாப்டர் வேண்டும் என்றால் ரூ.199 செலுத்தி வாங்கி கொள்ளலாம் என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் தங்களது சில டிவைஸ்களை பாக்சில் சார்ஜிங் அடாப்டர் இன்றி விற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளது ரெட்மி. சரி தற்போது Redmi Note 11 SE மொபைலின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே சீனாவில் கிடைக்கும் இந்த மொபைல் இது Mali-G76 MC4 GPU உடன் இணைந்து MediaTek Helio G95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. புதிய மொபைலான Redmi Note 11SE 6.43-இன்ச் ஃபுல் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 1,100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. மேலும் இது 6GB LPDDR4X ரேம் மற்றும் 64GB UFS 2.2 இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த டிவைஸ் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512GB வரை எக்ஸ்பேன்டபிள் ஸ்டோரேஜை பெறுகிறது.

Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்

ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போன் Android 11 அடிப்படையிலான MIUI 12.5-ல் இயங்கும் டூயல் சிம் மொபைலாகும். கேமராவை பொறுத்தவரை இந்த மொபைல் பின்பக்கத்தில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் வீடியோ கால்ஸ் மற்றும் செல்ஃபிக்களுக்காக 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த டிவைஸில் சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் உள்ளது.

Also Read : அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்.. விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்.! 

விலை..

6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.13,499-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் Flipkart மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வருகிறது. Bifrost Blue, Cosmic White, Space Black மற்றும் Thunder Purple வண்ண விருப்பங்களில் கிடைக்கும். பிஃப்ரோஸ்ட் ப்ளூ, காஸ்மிக் ஒயிட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் தண்டர் பர்பிள் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Redmi, Technology, Xiaomi