• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அசத்தலான அம்சங்களுடன் வரும் ‘ரெட்மி நோட் 11 சீரிஸ்’ - அக்டோபர் 28ல் வெளியீடு!

அசத்தலான அம்சங்களுடன் வரும் ‘ரெட்மி நோட் 11 சீரிஸ்’ - அக்டோபர் 28ல் வெளியீடு!

ரெட்மி நோட் 11 சீரிஸ்’

ரெட்மி நோட் 11 சீரிஸ்’

ரெட்மி நோட் 11ன் ப்ரோ வேரியண்ட்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 920 SoC இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11 சீரிஸை வரும் அக்டோபர் 28ல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ரெட்மி நிறுவனம் நோட் 10 சீரிஸின் வெற்றிக்கு பிறகு, நோட் 11 சீரிஸின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. சீனாவில் மட்டுமே இந்த சீரிஸ் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 11 சீரிஸை பற்றி வெளிவந்த முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

வழக்கம் போல ஒரு மாடலாக இல்லாமல் மூன்று மாடல்களில் ரெட்மி நோட் 11 சீரிஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ மேக்ஸ் என குறிப்பிட்டுள்ளனர். ரெட்மி நோட் 11 சீரிஸ் ‘5 ஜி ’ சப்போர்ட்டுடன் வருகிறது. இதில் பயன்படுத்தும் ஆக்டோ கோர் SoC ப்ராசெஸ்ஸார் ஏற்கனவே ரியல்மியின் 8 எஸ் மாடலில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 11ஆனது மீடியா டெக் டைமென்சிட்டி 810 சிப்புடன் வருகிறது. இது 120 ஹெச்இசட் எல்சிடி திரையை கொண்டிருக்கிறது.

மீடியா டெக் டைமென்சிட்டி ப்ராசசர் வசதியுடன் வருவதால், எந்த வித ஹாங் இல்லாமல் நீண்ட நேரம் பயன்படுத்தலாம். பப்ஜி,பிரீ பயர் போன்ற விளையாட்டுகளை வேகமாக விளையாடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 5,000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மியின் போட்டி நிறுவனங்களான ஓப்போ, விவோ, ரியல்மி இதை விட அதிக வாட்ஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த பாஸ்ட் சார்ஜிங் வசதியை மேலும் அதிகப்படுத்தி இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Also read... பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இதுவே சரியான தருணம் - தீபாவளி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!

ரெட்மி நோட் 11ன் ப்ரோ வேரியண்ட்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 920 SoC இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் OLED திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது 67W அல்லது 120W வேகமான சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. பின்புற கேமரா செவ்வக அமைப்புடன் வருகிறது. 108 எம்பியுடன் அல்லது 50 எம்பியுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3.5 ஹெட்போன் போர்ட் வசதியையும் பெற்றுள்ளது. முன்பக்கம் பஞ்ச்-ஹோல் நாட்சினை கொண்டு வருகிறது. ரெட்மி நோட் 11 சீரிஸ் 6 ஜிபி/128 ஜிபி மற்றும் 8 ஜிபி/128 ஜிபி வகைகளில் வருகிறது. இதில் ரெட்மி நோட் 11 ப்ரோ கூடுதலாக 8 ஜிபி/256 ஜிபி வேரியண்டுடன் வருகிறது என்பது முக்கியமான அம்சமாகும். வெளியீட்டுக்கு முன்னரே ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெட்மி நோட் 11 சீரிஸ் இந்தியாவில் வெளிவருவது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: