• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Redmi Note 11 சீரிஸை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Redmi Note 11 சீரிஸை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ரெட்மி நோட் 11

ரெட்மி நோட் 11

சீனாவில் இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ ஃபோன் 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB உள்ளிட்ட 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • Share this:
முன்னணி ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக திகழும் சியோமி நிறுவனம் தந்து ரெட்மி நோட் 11 சீரிஸை சீனாவில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து உள்ளது. இதன் மூலம் ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ ஆகியவை நோட் சீரிஸின் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஆகியவை பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை தவிர, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 3 புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஃபோன்களும் 5G கனெக்டிவிட்டியுடன் வருகின்றன.

விலை விவரங்கள்..

ரெட்மி நோட் 11:

4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 மாடலின் விலை சீனாவில் 1,199 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.14,050. மேலும் ரெட்மி நோட் 11 போன் 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB உட்பட மற்ற மூன்று கான்ஃபிகரேஷனில் வருகிறது. சீனாவில் 6GB வேரியன்டின் விலை தோராயமாக ரூ.15,200, 8GB வேரியன்டின் விலை தோராயமாக ரூ. 17,550, 128GB வேரியன்டின் விலை தோராயமாக ரூ.19,900 ஆகும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ:

சீனாவில் இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ ஃபோன் 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB உள்ளிட்ட 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே 1,599 யுவன் (தோராயமாக ரூ.18,700), 1,899 யுவான் (தோராயமாக ரூ.22,200) மற்றும் 2,099 யுவான் (தோராயமாக ரூ.24,600) ஆகும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ+:

ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஸ்மார்ட் ஃபோன் 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆகிய 3 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே 1,899 யுவான் (தோராயமாக ரூ.22,200), 2,099 யுவான் (தோராயமாக ரூ.24,600) மற்றும் 2,299 யுவான் (தோராயமாக ரூ.26,900) ஆகும்.

சிறப்பம்சங்கள்..

ரெட்மி நோட் 11:

இந்த ஸ்மார்ட் ஃபோன் MediaTek Dimensity 810 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோன் 6.6 இன்ச் FHD+ LCD பேனல் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன், 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்ஃபிக்காக இதன் முன்பக்கத்தில் 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ+ & ரெட்மி நோட் 11 ப்ரோ:

ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஸ்மார்ட் ஃபோன் MediaTek Dimensity 920 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டிவைஸ் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்பிளிங் ரேட்டுடன் 6.67-இன்ச் AMOLED பேனலையும் கொண்டுள்ளது. மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 4,500 mAh பேட்டரி கொண்டுள்ளது. 108MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2MP டெலிமேக்ரோ யூனிட் ஆகியவை அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. முன்பக்கத்தில்16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்கும் இந்த ஃபோன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு (Gorilla Glass Victus protection) மற்றும் மேம்படுத்தப்பட்ட VC லிக்விட் கூலிங் சிஸ்டமுடன் வருகிறது.

Also read... 40% வரை தள்ளுபடி ஸ்மார்ட் ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்த அமேசான்!

ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலானது டிஸ்ப்ளே, சிப்செட் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள் உட்பட பல அம்சங்களை ரெட்மி நோட் 11 ப்ரோ+ மாடலில் உள்ளதையே கொண்டு வருகிறது. என்றாலும் நோட் 11 ப்ரோ ஸ்லோ 65W சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5,160mAh பேட்டரியுடன் வருகிறது. இது தான் இரண்டு மாடல்களுக்கும் உள்ள வித்தியாசம். மற்றபடி அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: