முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ரியல்மி 8 5ஜி மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 10T!

ரியல்மி 8 5ஜி மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 10T!

ரியல்மி 8 5ஜி மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக ரெட்மி நோட் 10T இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி 8 5ஜி மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக ரெட்மி நோட் 10T இந்தியாவில் அறிமுகம்!

ரெட்மி நோட் 10T 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை டிவிட்டரில் உறுதி செய்துள்ளது. இந்த பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்.

  • Last Updated :

ஜூலை 20ம் தேதி நடைபெறும் நிகழ்வில், இந்தியாவில் ரெட்மி நோட் 10T 5ஜின் விலையை சியோமி வெளியிடுகிறது.

பட்ஜெட் விலையில் ரெட்மியின் ஸ்மார்ட்ஃபோன், அதுவும் 5ஜி மொபைல் என்பது ஆச்சரியப்படுத்தும் செய்தி தான். இந்தியாவில் ரெட்மி நோட் 10T 5ஜி-ன் அறிமுகம் உறுதியாகியுள்ளது. ஜூலை 20 ஆம் தேதி, ரெட்மி ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் ரெட்மியின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விவரக்குறிப்புகளின் அடிப்படையில், இந்தியாவில் ரெட்மி நோட் 10T 5ஜி விலை ரூ. 15,000 இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெட்மி இந்தியா, ரெட்மி நோட் 10T 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை டிவிட்டரில் உறுதி செய்துள்ளது. இந்த பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.

ஃபாஸ்ட் மற்றும் ஃபியூச்சரிஸ்டிக் என்று டிவீட் செய்துள்ளது ரெட்மி இந்தியா.

இந்த சாதனம் மீடியா டெக் டைமென்ன்ஸிட்டி 700 SoC ஐ கொண்டுள்ளது. இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய ஸ்டாரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நோட் 10T, 6.5 அங்குல FHD + IPS LCD பேனலை 90Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் கொண்டுள்ளது.

ரெட்மியின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 11 இல் MIUI உடன் இயங்குகிறது. ரெட்மி நோட் 10T 5ஜி இல், 5,000 mAh பேட்டரியும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வருகிறது.

ஸ்மார்ட்ஃபோனின் பின்புறத்தில் டிரிப்பில்-கேமரா செட்டப் உள்ளது. இதில், 48MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ யூனிட் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கியுள்ளன. செல்ஃபிக்களுக்கு, துளை-வடிவ கேமரா கட்அவுட்டில் 8MP சென்சார் உள்ளது. கனக்டிவிட்டி விருப்பங்களில் புளூடூத், வைஃபை, 5 ஜி, 4 ஜி, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பல தேர்வுகள் உள்ளன.

Also read: தொழில்நுட்ப உலகின் அப்டேட்ஸ்: Huawei Band 6, வாட்ஸ்அப் புதிய அம்சம், Realme சலுகைகள்..!

இதையெல்லாம் படித்து உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், என்றால், ரெட்மியின் இந்த ஸ்மார்ட்ஃபோன் விவரக்குறிப்புகள் அனைத்தும் POCO M3 Pro உடன் ஒத்திருக்கும். வெளிப்படையாகத் தெரியும் வேறுபாடு என்பது, சாதனத்தின் வடிவமைப்பில் காணப்படுகிறது.

top videos

    தோற்றத்தில் மட்டுமே பெரிய வேறுபாடுடன் வரும் இந்த ஸ்மார்ட்ஃபோன், ரியல்மி மற்றும் பல பட்ஜெட் ஃபோன்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. ஜூலை 20 ம் தேதி நடைபெறும் நிகழ்வில் இந்தியாவில் ரெட்மி நோட் 10T 5 ஜி விலையை சியோமி நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

    First published:

    Tags: RealMe, Redmi