• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவில் அடுத்த மாதத்தில் அறிமுகமாகிறது 'Redmi Note 10'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

இந்தியாவில் அடுத்த மாதத்தில் அறிமுகமாகிறது 'Redmi Note 10'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Redmi Note 10 series

Redmi Note 10 series

Redmi Note 10 சீரிஸ் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்.பி பிரைமரி சென்சாருடன் குவாட்-கேமரா சிஸ்டம் மற்றும் 5,050 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் வசதி போன்றவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருகிற மார்ச் மாதம் Redmi Note 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி அடுத்த தலைமுறை 'Note' வரிசையை இந்த வார தொடக்கத்தில் அதன் ட்வீட்கள் மூலம் டீசர் வீடியோக்களை வெளியிட்டு வந்தது குறிப்பிப்பிடத்தக்கது. இருப்பினும், Redmi Note 10 சீரிஸின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரக்குறிப்புகள் தற்போது தெளிவாக தெரியவில்லை. மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்தத் சீரிஸில் Redmi Note 10 மற்றும் Redmi Note 10 pro ஆகிய இரண்டு மாடல்கள் வெளியாகின்றன.

மேலும் இது குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல், இந்த நோட் 10 சீரிஸ் ஒரு "மென்மையான" செயல்திறனை வழங்கும் என்று ஷியோமி வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், தனது சமீபத்திய ட்வீட்டில் "Redmi Note 10" சீரிஸ் வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிட்டுள்ளார். புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டு வந்த பழைய வந்ததிகளுக்கு அவரது ட்வீட் முற்றுப்புள்ளி வைத்தது.

மேலும், புதிய Redmi Note 10 சீரிஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 9- ஐ விட விற்பனையில் அதிக வெற்றிபெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் நோட் 9 சீரிஸில் ரெட்மி நோட் 9 புரோ மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அடங்கியிருந்தன. பின்னர் வழக்கமான ரெட்மி நோட் 9-ஐ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதனுடன் சேர்த்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான Redmi Note 9 சீரிஸ் விற்பனையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு Redmi Note 10 சீரிஸ் இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று ஒரு அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Also read... அட்டகாசமான அம்சத்துடன் போகோ M3 ஸ்மார்ட்போன் அறிமுகம் - பிளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கியது!

சுவாரஸ்யமாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதிலிருந்து உலகளவில் 20 கோடிக்கும் அதிகமான யூனிட்களை அனுப்பியுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்தது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை உலகளவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது ஸ்மார்ட்போன் சீரிஸாக Redmi Note 8 இருந்ததாகவும் நிறுவனம் கூறியுள்ளது. Redmi Note 10 வெண்ணிலா மாடல் ஜனவரி 2021 இல் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) இணையதளத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதேபோல ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் வெண்ணிலா ரெட்மி நோட் 10 ஆகிய இரண்டும் பல செர்டிபிகேஷன் வெப்சைட்டுகளில் தோன்றியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இந்த சீரிஸின் சில விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன. Redmi Note 10 சீரிஸ் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்.பி பிரைமரி சென்சாருடன் குவாட்-கேமரா சிஸ்டம் மற்றும் 5,050 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் வசதி போன்றவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் வெறியாண்டுகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: