இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி K20, K20 ப்ரோ..!

6ஜிபி+128ஜிபி கொண்ட ரெட்மி K20 ப்ரோ 27,999 ரூபாய்க்கும் 8ஜிபி+ 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி K20 ப்ரோ 30,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன.

Web Desk | news18
Updated: July 22, 2019, 11:49 AM IST
இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி K20, K20 ப்ரோ..!
ரெட்மி K20 சீரிஸ்.
Web Desk | news18
Updated: July 22, 2019, 11:49 AM IST
ஜியோமி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களும் இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

சீன நிறுவனமான ஜியோமி கடந்த ஜூலை 17-ம் தேதி ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியது. இன்று முதல் Mi.com இணையதளத்தில் அல்லது ஃப்ளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

ரெட்மி K20 21,999 ரூபாய்க்கும் ரெட்மி K20 ப்ரோ 27,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது. கார்பன் ப்ளாக், ப்ளேம் ரெட் மற்றும் க்ளேசியர் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் ரெட்மி K20 உள்ளது. ரெட்மி K20 ப்ரோ, இதே மூன்று நிறங்களில் 999 ரூபாய் மதிப்புள்ள ப்ரீமியம் கவர் உடனும் விற்பனைக்கு உள்ளது.


ரெட்மி K20, K20 Pro வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கையில் ஃபோன் கிடைத்ததுமே புது அப்டேட் காத்திருக்கும். ரெட்மி K20 ஸ்மார்ட்ஃபோனுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் 471MB கொண்டதாகவும் K20 Pro 475MB கொண்டதாகவும் உள்ளது.

ஜியோமியின் வெளியீடுகளிலேயே புதிய ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரெட்மி K20 6 ஜிபி+64 ஜிபி 21,999 ரூபாய்க்கும் மற்றும் 6 ஜிபி+128 ஜிபி ஃபோன் 23,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளன.

6 ஜிபி+128 ஜிபி கொண்ட ரெட்மி K20 ப்ரோ 27,999 ரூபாய்க்கும் 8 ஜிபி+ 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி K20 ப்ரோ 30,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன.

Loading...

மேலும் பார்க்க: ஓப்பன் சேலில் விற்பனைக்கு வந்தது ரியல்மியின் மலிவான C2 ஸ்மார்ட்ஃபோன்..!
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...