ரெட்மி K20 மற்றும் K20 ப்ரோ வாங்க விருப்பமா? இன்று முதல் ஆல்ஃபா சேல்ஸ் புக்கிங்!

கூப்பன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கவில்லை என்றால் கூப்பனுக்கான 855 தொகையை Mi.com மூலம் பதிவு செய்தவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

Web Desk | news18
Updated: July 12, 2019, 3:20 PM IST
ரெட்மி K20 மற்றும் K20 ப்ரோ வாங்க விருப்பமா? இன்று முதல் ஆல்ஃபா சேல்ஸ் புக்கிங்!
ஆல்ஃபா சேல்ஸ்
Web Desk | news18
Updated: July 12, 2019, 3:20 PM IST
ஜியோமி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரெட்மி K20 மற்றும் K20 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கான புக்கிங் இன்று முதல் தொடங்குகிறது.

ரெட்மி K20 மற்றும் K20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களையும் முன்பதிவு செய்துகொள்ள இன்று ஆல்ஃபா சேல்ஸ் தொடங்குகிறது. வருகிற ஜூலை 17-ம் தேதி வெளியாகும் இந்த இரு ஃபோன்களுக்கும் இந்த ஆல்ஃபா சேல்ஸ் மூலம் முன்பதிவுக் கூப்பனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று நண்பகல் 12 மணி முதல் ஆல்ஃபா சேல்ஸ் தொடங்கியுள்ளது. முன்பதிவுக் கூப்பனைப் பெற வாடிக்கையாளர்கள் 855 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே இன்றைய ஆல்ஃபா சேல்ஸ் நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளம் அல்லது Mi.com தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


கூப்பன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கவில்லை என்றால் கூப்பனுக்கான 855 தொகையை Mi.com மூலம் பதிவு செய்தவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஃப்ளிப்கார்ட் வழியாக முன்பதிவு செய்தவர்கள் ஃபோன் வாங்கவில்லை என்றால் 855 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்டில் ஷாப்பிங் செய்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க: ஜூலை 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’..!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...