₹4,80,000-க்கு அறிமுகமாகும் ரெட்மி K20 ப்ரோ..! - அப்படி என்ன ஸ்பெஷல்?

கடந்த 2014-ம் ஆண்டு Mi 3 ஸ்மார்ட்ஃபோன் உடன் இந்தியாவில் அறிமுகமானது ஜியோமி நிறுவனம்

Web Desk | news18
Updated: July 17, 2019, 8:49 PM IST
₹4,80,000-க்கு அறிமுகமாகும் ரெட்மி K20 ப்ரோ..! - அப்படி என்ன ஸ்பெஷல்?
ரெட்மி k20 ப்ரோ (photo-redmi/twitter)
Web Desk | news18
Updated: July 17, 2019, 8:49 PM IST
இந்தியாவில் இன்று கால் பதித்துள்ளது ரெட்மி K20 ப்ரோ ஸ்பெஷல் வெர்ஷன். மற்ற ரெட்மி ஃபோன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்மார்ட்ஃபோனாக இது இருக்கும் என அறிமுகம் செய்துள்ளது ஜியோமி.

ரெட்மி K20 ப்ரோவின் ஸ்பெஷல் வெர்ஷனின் இந்திய விற்பனை விலை 4,80,000 ரூபாய் ஆகும். பல தொழில்நுட்ப அப்டேட்கள் இருந்தாலும் தங்கத்திலான பூச்சு உடன் வெளியாகிறது ரெட்மி K20 ப்ரோ. ஃபோனின் பின்பக்கத்தில் தங்கத்திலான பூச்சும் வைரக் கற்கள் பதித்த ‘K’ என்ற ஆங்கில எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜியோமி இந்தியாவின் மேலாள் இயக்குநர் மனு குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்மார்ட்ஃபோனாக K20 ப்ரோ இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ரெட்மி K20 ப்ரோ உடன் இந்த ஸ்பெஷல் வெர்ஷனும் அதிகப்படியாக விற்பனைக்கு வருமா அல்லது குறைந்த பதிப்புகளே வெளியிடப்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரையில் வெளியாகவில்லை.

மேலும், ஸ்பெஷல் வெர்ஷன் ரெட்மி K20 ப்ரோ-வின் சிறப்பு அம்சங்கள் மற்றும் இதர அம்சங்கள் குறித்தும் எந்தவொரு அறிவிப்பும் இல்லை. தங்கமும் வைரக் கற்களும் பதிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு Mi 3 ஸ்மார்ட்ஃபோன் உடன் இந்தியாவில் அறிமுகமானது ஜியோமி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: உலக ஈமோஜி தினம்: புதுப்புது ஈமோஜிக்களை அறிமுகப்படுத்த கூகுள், ஆப்பிள் திட்டம்!
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...