10,500 ரூபாயில் சந்தைக்கு வந்த ஜியோமியின் ரெட்மி Note 7

பல புரளிகளையும், எதிர்பார்ப்புச் செய்திகளையும் பொய்யாக்கி பட்ஜெட் விலையில் அதிநவீனமாக உள்ளது நோட் 7.

10,500 ரூபாயில் சந்தைக்கு வந்த ஜியோமியின் ரெட்மி Note 7
ரெட்மி நோட் 7
  • News18
  • Last Updated: January 11, 2019, 11:42 AM IST
  • Share this:
புரளிகள் பலவற்றைக் கடந்து வெற்றிகரமாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது ஜியோமியின் ரெட்மி நோட் 7.

சீன நிறுவனமான ஜியோமியின் துணை நிறுவனம் தான் ரெட்மி. ரெட்மி ரகங்களின் புதிய வரவாக 10,500 ரூபாய்க்கு ரெட்மி Note 7 சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

48 பிக்சல் ரியர் கேமிரா உடன் அதிநவீன தொழில்நுட்ப அப்டேட்களுடன் ரெட்மி Note 7 உள்ளது. பல புரளிகளையும், எதிர்பார்ப்புச் செய்திகளையும் பொய்யாக்கி பட்ஜெட் விலையில் அதிநவீனமாக உள்ளது நோட் 7.


3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட நோட் 7, 10,500 ரூபாய்க்கும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட நோட் 12,400 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான இரண்டு ரகங்களோடு நிற்காமல் மூன்றாவதாக 14,500 ரூபாய்க்கு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோட் 7-ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ரஜினிVSதிமுக... உறவும்-பகையும்
First published: January 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்