புதிய Redmi A1 என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது Redmi நிறுவனம். இந்த டிவைஸ் இந்த ஆண்டு ரெட்மி நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட் போனாக இருக்கிறது. புதிய Redmi A1 மொபைலானது Xiaomiயின் Mi A சீரிஸ் ஸ்மார்ட் போன்களுடன் நேரடி தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் கூட Mi A சீரிஸை போன்றே யூஸர்களுக்கு ஒரு Stock Android அனுபவத்தை வழங்குகிறது. ரெட்மியின் இந்த மலிவு விலை 4G ஸ்மார்ட்போன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள் இங்கே...
இந்தியாவில் Redmi A1 மொபைலின் விலை மற்றும் எப்போது கிடைக்கும்.?
மலிவு விலை 4ஜி ஸ்மார்ட் போனான Redmi A1-ன் ஒரே வேரியன்ட்டான (2GB ரேம் + 32GB ஸ்டோரேஜ்) விலை ரூ.6,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் கிளாசிக் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 4 மணி முதல், Amazon india, Mi.com, Mi Home Stores மற்றும் Xiaomi-யின் ரீடெயில் பார்ட்னர்ஸ் உள்ளிட்டவை மூலம் வாடிகையாளர்கள் வாங்க கிடைக்கும்.
Redmi A1 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
டூயல் நானோ சிம் ஸ்லாட்களை கொண்ட Redmi A1 மொபைலானது ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ A22 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. 32GB ஸ்டோரேஜ் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் மைக்ரோ SD கார்டை பயன்படுத்தி 512GB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
Also Read : குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை Redmi A1 மொபைல் சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் Stock Android அனுபவம் தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முந்தைய Xiaomi என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் போன்களை விட சிறந்த அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Redmi A1 மொபைலின் பின்புறத்தில் 8MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP செகன்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
Also Read : 2.7 கோடி பதிவுகளை நீக்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் - மெட்டா நிறுவனம் அறிக்கை.!
செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக முன்பக்கத்தில் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பிற அம்சங்களில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், டூயல் சிம் 4ஜி இணக்கத்தன்மை, சிங்கிள்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, GNSS அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் போனில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான பொழுதுபோக்குகளை வழங்க டாப்-ஃபையரிங் ஸ்பீக்கர்ஸுடன் கூடிய ப்ரீலோடட் எஃப்எம் ரேடியோ உள்ளது. 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்ட Redmi A1 மொபைல் 10W சார்ஜருடன் வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Redmi, Smartphone, Technology