முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ரெட்மி 9A ஸ்போர்ட் மற்றும் ரெட்மி 9i ஸ்மார்போன்கள் அறிமுகம் - முழு விவரம்!

ரெட்மி 9A ஸ்போர்ட் மற்றும் ரெட்மி 9i ஸ்மார்போன்கள் அறிமுகம் - முழு விவரம்!

ரெட்மி 9A

ரெட்மி 9A

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 512 ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சியோமி இந்தியாவில் அதிக ஆரவாரம் இல்லாமல் ரெட்மி பிராண்டின் கீழ் இரண்டு பட்ஜட் விலை ஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி 9A ஸ்போர்ட் மற்றும் ரெட்மி 9i ஸ்போர்ட் ஆகிய இரண்டும் மீடியாடெக் செயலிகளால் இயக்கப்படுகிறது மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை இங்கு காண்போம்.,

ஸ்மார்ட்போன் விலை மற்றும் ஸ்டோரேஜ் :

ரெட்மி 9A ஸ்போர்ட் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரண்டு ரேம் மாடல்களில் வருகிறது. இந்த இரண்டு மாடல்களிலும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. ரெட்மி 9A ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் 2 ஜிபி மாடல் விலை ரூ .6,999, 3 ஜிபி மாடல் விலை ரூ .7,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9i ஸ்போர்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்ட்டின் தொடக்க விலை ரூ .8,799ஆக உள்ளது. மற்றொரு மாடலான 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ .9,299 ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களை Mi.com மற்றும் Amazon வழியாக வாங்கலாம்.

Also read... தொலைந்த உங்க ஸ்மார்ட்போனை 'Find My Device' மூலம் கண்டுபிடிக்கலாம்!

ரெட்மி 9A ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் :

ரெட்மி 9A 6.53 இன்ச் டிஎஃப்டி ஐபிஎஸ் எச்டி+ திரை 1600x720 பிக்சல் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் MIUI ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி உள்ளது மற்றும் 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 512 ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும். ஸ்மார்ட்போனில் f/2.2 aperture 13MP பின்புற கேமராவும், 5 MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்த போன் கார்பன் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் கோரல் கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 9i ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் :

Redmi 9i ஸ்போர்ட் மீடியாடெக் ஹீலியோ G25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மற்றும் MIUI ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் டிஎஃப்டி ஐபிஎஸ் எச்டி+ திரை பொருத்தப்பட்டுள்ளது.1600x720 resolution மற்றும் 20: 9 aspect ratio உள்ளது. மேலும் 13MP பின்புற கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது, மேலும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்போன் கார்பன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை உள்ளிட்ட மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

First published:

Tags: Redmi