Home /News /technology /

மலிவான விலையில் ஜியோமியின் ரெட்மி 9A - இன்று விற்பனை தொடங்கியது

மலிவான விலையில் ஜியோமியின் ரெட்மி 9A - இன்று விற்பனை தொடங்கியது

ரெட்மி

ரெட்மி

மலிவான விலையில் ஜியோமி அறிமுகப்படுத்தியுள்ள ரெட்மி 9ஏ இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

    ஜியோமி தற்போது இந்தியாவில் ரெட்மி 9A என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ரெட்மி 9 வரிசையின் கீழ் மூன்றாவதாக இந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் வந்துள்ளது. இது ஜியோமி நிறுவனத்தின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாயாகவும், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் 7,499 ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று மீண்டும் எம்ஐ டாட் காம் மற்றும் அமேசானில் இன்று நண்பகல் 12:00 மணிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் விற்பனை சலுகைகளில் 'எச்எஸ்பிசி' கேஷ்பேக் கார்டுகள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5% உடனடி தள்ளுபடி, பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் பே 'ஐசிஐசிஐ' வங்கி கிரெடிட் கார்டில் 5% தள்ளுபடி மற்றும் பிரைம் உறுப்பினர் அல்லாத உறுப்பினர்களுக்கு 3% தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு விலை இல்லாத 'ஈஎம்ஐ' வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி 9A ஸ்மார்ட்போன், 6.53 இன்ச் ‘டாட் டிராப்’ எல்சிடி டிஸ்ப்ளே, எச்டி + 1600 x 720 பிக்சல்கள் மற்றும் 20:9 என்ற விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ G25 SoC பிராசசரை கொண்டுள்ளது. இது 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என இரு மாடல்களில் உள்ளது. 32 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ், 512 ஜிபி வரையிலான எக்ஸ்பேண்டபிள் ஸ்டோரேஜ், 5,000 எம்ஏஎச் சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ELB தொழில்நுட்பம், மைக்ரோ USB போர்ட்,ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பின்புறத்தில் உள்ள கேமரா 13 மெகாபிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. இது எஃப் / 2.2 துளை லென்ஸுடன் உள்ளது. முன்பக்கத்தில் எஃப் / 2.2 துளை லென்ஸுடன் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.


    ஜியோமியில் மேம்படுத்தப்பட்ட ஆயுட்கால பேட்டரி (ELB) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது பேட்டரியின் தரத்தை மூன்று ஆண்டுகள் வரை பராமரிக்க உதவும். டூயல் சிம் திறன், 4 ஜி எல்டிஇ, வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் ஆகும். இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இல்லை. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விருப்பங்களில் மிட்நைட் பிளாக், நேச்சர் கிரீன் மற்றும் சீ ப்ளூ ஆகிய மூன்று கலர்களிலும் வெளிவந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Redmi

    அடுத்த செய்தி