இந்திய மொபைல் யூஸர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள சியோமியின் துணை பிராண்டான ரெட்மியின் 2 பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களின் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் Redmi 9A மற்றும் Redmi 9A Sport ஆகிய இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களின் விலை ரூ.300 உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலவி வரும் செமி கன்டக்டர்ஸ் பற்றாக்குறை, காம்போனென்ட்ஸ் விலை உயர்வு மற்றும் சப்ளை செயின் சிக்கல்களின் விளைவாக இந்த விலை உயர்வு வந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பை தொடர்ந்து ரூ.6,999-ஆக இருந்த Redmi 9A மொபைலின் (பேஸிக் 2GB ரேம் + 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்) விலையானது தற்போது ரூ.7,299-ஆக உள்ளது. அதே போல ரூ.7,999-ஆக இருந்த Redmi 9A Sport மொபைலின் (3GB ரேம் + 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்) விலை தற்போது ரூ.8,299-ஆக உயர்ந்துள்ளது.
Redmi 9A மொபைல் மிட்நைட் பிளாக், நேச்சுரல் கிரீன் மற்றும் சீ ப்ளூ உள்ளிட்ட கலர்களில் வருகிறது. அதே போல Redmi 9A Sport மொபைல் கார்பன் பிளாக், கோரல் கிரீன் மற்றும் மெட்டாலிக் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வாடிகையாளர்களுக்கு கிடைக்கிறது. Redmi 9A மொபைல் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் Redmi 9A Sport மொபைல் கடந்த செப்டம்பரில் தான் அறிமுகமானது. 2 போன்களும் 20:9 டிஸ்ப்ளேவுடன் வருகின்றன மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G25 SoC ப்ராசஸரை கொண்டுள்ளன.
மேற்காணும் இரு மொபைல்களின் விலை உயர்வை உறுதிப்படுத்தி இருக்கும் Xiaomi நிறுவனம், இது தொடர்பான அறிக்கையில் இந்த விலை மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான காம்போனென்ட்ஸின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எனவே வேறு வழியின்றி மொபைல் விலை அதிகரிப்பு நடவடிக்கை தவிர்க்க முடியாததாக இருப்பதாகவும் சியோமி கூறி உள்ளது. Redmi 9A மற்றும் Redmi 9A Sport ஆகிய 2 ஸ்மார்ட் ஃபோன்களுமே MediaTek சிப்செட்டைப் பயன்படுத்துகின்றன. மீடியா டெக் சிப்செட்களின் விலை சமீப காலமாக அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.
Also read... இனி யூடியூப் வீடியோக்களில் டிஸ்லைக் கவுன்ட்டை பார்க்க முடியாது - ஏன் தெரியுமா?
Xiaomi தனது பட்ஜெட் ஃபோன்களின் விலையை இந்தியாவில் உயர்த்துவது இது முதல் முறை அல்ல. கடந்த செப்டம்பரில் Redmi 9, Redmi 9 Power, Redmi 9 Prime, Redmi 9i, Redmi Note 10T மற்றும் Redmi Note 10S உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களின் விலைகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.