• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Redmi 9 Activ - இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

Redmi 9 Activ - இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

Redmi 9 Activ

Redmi 9 Activ

அமேசான், Mi.com, Mi Home மற்றும் Mi Studio மூலம் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

  • Share this:
சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி ரெட்மி 9 ஆக்டிவ் (Redmi 9 Activ) என்ற பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஸ்மார்ட் ஃபோனின் விற்பனை  துவங்கி இருக்கிறது. இன்று (செப்டம்பர் 24) முதல் விற்க துவங்கப்பட்டுள்ள Redmi 9 Activ டிவைஸானது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் Redmi 9-ன் வேரியன்ட்டாக வெளி வந்துள்ளது. தற்போது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Redmi 9 ஸ்மார்ட் ஃபோனானது 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் & ஸ்போர்ட்டி ஆரஞ்ச், கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ உள்ளிட்ட மூன்று கலர்களில் கிடைக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Redmi 9 Activ ஸ்மார்ட் ஃபோனை இதனுடன் ஒப்பிட்டால், புதிய 2 கலர் ஆப்ஷன்கள் மற்றும் 6GB ரேம் கொண்ட டாப்-எண்ட் வேரியன்ட்டாக இது இருக்கும். ஸ்பெசிஃபிகேஷன்களின் அடிப்படையில் பார்க்கும் போது பெரும்பாலானவை Redmi 9 உடன் ஒத்து போகிறது. அதிக ரேம் போர்டு (6GB) மற்றும் மெட்டாலிக் பர்ப்பில் & கோரல் க்ரீன் கலர் ஆப்ஷன்கள் மட்டுமே இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. Redmi 9 Activ 20: 9 டிஸ்ப்ளே மற்றும் டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இது octa-core MediaTek Helio G35 SoC ப்ராசஸரால் இயக்கப்படுகிறது. தவிர Redmi 9 Activ-ல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்:

இரட்டை நானோ சிம் ஸ்லாட் கொண்ட இந்த டிவைஸ், ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 12-ல் இயங்குகிறது. இது 6.53 இன்ச் எச்டி+ (720x1,600 பிக்செல்ஸ்) டாட் ட்ராப் டிஸ்ப்ளே மற்றும் 400nits பீக் பிரைட்னசை கொண்டுள்ளது. பின்பக்கம் காணப்படும் டூயல் கேமரா செட்டப்பில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் f/2.2 லென்ஸ் மற்றும் f/2.4 லென்ஸுடன் கூடிய 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரியர் கேமரா செட்டப்பானது ஒரு சிங்கிள் டோன் LED ஃப்ளாஷுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் AI பியூட்டிஃபை 5.0 மற்றும் AI சீன் டிடெக்ஷன் உள்ளிட்ட அம்சங்களை சப்போர்ட் செய்கிறது.

Also Read:    டாடா தயாரித்து வழங்கும் Airbus C295 ரக ஏர் லிஃப்டர் விமானங்களின் சிறப்புகள்!

இந்த டிவைஸின் முன் பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் இது 5000mAh பேட்டரி கெப்பாசிட்டியை கொண்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு USB டைப்-சி போர்ட் சார்ஜர் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்காக பின்புறம் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத் v5.00, USB Type-C, FM ரேடியோ, 3G, மற்றும் 4G ஆகியவை அடங்கும், இதில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை அடங்கும். தவிர இந்த ஸ்மார்ட் போன் ஃபேஸ் அன்லாக்கை கொண்டுள்ளது.

விலை:

இந்தியாவில் Redmi 9 Activ ஸ்மார்ட் போன் 4GB + 64GB & 6GB + 128GB ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.9,499, 6GB ரேம் + 128GB மாடலின் விலை ரூ. 10,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமேசான், Mi.com, Mi Home மற்றும் Mi Studio மூலம் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: