ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 10A - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..

நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 10A - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..

ரெட்மி 10A

ரெட்மி 10A

Redmi 10A Price : Redmi 10A மொபைலின் இந்திய விலை ரூ.10,000-த்திற்குள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

புதிய பட்ஜெட் ஃபிரெண்ட்லி ஸ்மார்ட் ஃபோனான Redmi 10A மொபைலை இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதி அறிமுகப்படுத்துகிறது சியோமி நிறுவனம். நாளை அறிமுகமாக இருக்கும் Redmi 10A மொபைலுக்கான அதிகாரப்பூர்வ பேஜை செட் செய்துள்ளது சியோமி. அதே நேரம் அமேசான் இந்தியாவிலும் இந்த புதிய மொபைல் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

புதிய Redmi 10A மொபைலின் அறிமுக தேதி ஏப்ரல் 20 என்றாலும், எப்போது முதல் விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவில் Redmi 10A கிடைக்கிறது, அதே மாடலே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறயாது. மேலும் இது Redmi 10-ஐ விட விலை மலிவாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை:

Redmi 10 தற்போது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 4GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.10,999-க்கும், 6GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.12,999-க்கும் விற்கப்படுகிறது.

இதனிடையே Redmi 10A மொபைலின் இந்திய விலை ரூ.10,000-த்திற்குள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் பரவி தகவல்களின் படிபடி, 4GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என்றும், 3GB ரேம் + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.8,999 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதை உறுதியான விலையாக எடுத்து கொள்ள முடியாது.

Also read : உங்கள் வீட்டிற்கு சிறந்த அன்லிமிடெட் WIFI பிளான்களை தேடுகிறீர்களா? விவரங்கள் இங்கே..

சிறப்பம்சங்கள் :

Redmi 10A-க்கான பிரத்யேக மைக்ரோசைட் புதிய மொபைலில் வாட்டர் டிராப் நாட்ச் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது 2 நாள் தாக்குப்பிடிக்க கூடிய பேட்டரி லைஃபை வழங்கும் பேட்டரி பேக்குடன் வரும் என தெரிகிறது. நல்ல கிரிப்பிற்காக EVOL டிசைன் மற்றும் பின்புறத்தில் சதுர வடிவ கேமரா டிசைன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சீனாவில் விற்பனையில் உள்ள அதே மாடல் Redmi 10A இங்கே அறிமுகப்படுத்தப்பட்டால் கீழ்காணும் ஸ்பெசிஃபிகேஷன்களை இந்திய Redmi 10A கொண்டிருக்கும்.

also read : அடடா... இனி யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்குவது இவ்வளவு சுலபமா ?

சீன Redmi 10A மொபைலானது PowerVR8320 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G25 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் 6.53 இன்ச் HD+ IPS LCD பேனல் 400 nits பீக் பிரைட்னஸ் உள்ள டிஸ்பிளே கொண்டது. இந்த போனின் டாப் வேரியன்ட் 4GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜூடன் வரும். சீன Redmi 10A மொபைல் 13 MP சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 5 MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.

இந்த போன் MIUI 12.5 அடிப்படையில் ஆண்ட்ராய்டு 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. மேலும் 10W சார்ஜிங் சப்போர்ட்டுடன்

5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. தவிர 4G LTE, ப்ளூடூத், Wi-Fi, ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது. சீனாவில் உள்ள அதே மாடல் இந்தியாவிலும் அறிமுகமானால் மேற்கண்ட அம்சங்கள் அடங்கிய Redmi 10A-வை இந்திய வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Redmi, Smartphone