6000mAh பேட்டரி, 4ஜிபி ரேம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் சியோமியின் ரெட்மி 10 அறிமுகம்!

ரெட்மி 10

அமேசான், Mi.com, Mi Home stores தளங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

  • Share this:
சியோமி நிறுவனத்தின் புத்தகம் புது வரவான ரெட்மி 10 பிரைம் போன் இந்திய செல்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட்டில் வெளியான ரெட்மி 9 பிரைம் போனின் அப்கிரேட் வெர்ஷனாக ரெட்மி 10 மாடல் அறிமுகமாகி உள்ளது. ஹோல் பன்ச் டிஸ்ப்ளே டிசைன், ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் பிரைமரி கேமரா 50 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G88 SoC, டியூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண்ட்ராய்ட் 11, 6.5 இன்ச் ஃபுல் HD டிஸ்பிளே, டியூயல் நானோ சிம் 4G LTE சப்போர்ட், டைப் C போர்ட், 6000mAh பேட்டரி உள்ளது. இந்த போனின் தொடக்க விலை 12,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.14,499. விற்பனைக்கு வரும். Astral White, Bifrost White மற்றும் Phantom Black என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

அமேசான், Mi.com, Mi Home stores தளங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. இதனால், துல்லியமாக புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Also read... உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி? படிப்படியான எளிய வழிமுறை!

அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளையும் மேற்கொள்ள செல்பீ கேமரா 8 மெகா பிக்சலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் ரெட்மி நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியும் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஸ்மார்ட்போனின் இயக்கத்தின் வேகம் சூப்பராக இருக்கும். MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது. ஹெச்.டி.எப்சி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு இம்.எம்.ஐ ஆஃபருடன், 750 ரூபாய் ரொக்க தள்ளுபடியும் கூடுதலாக கிடைக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: