ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள் - அதிகாரப்பூர்வமான விளக்கம்.!

உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள் - அதிகாரப்பூர்வமான விளக்கம்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp | உங்கள் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையம், செயலிகள் மற்றும் சோசியல் மீடியா நெட்வொர்க்கில் கணக்குகளைப் பயன்படுத்தபவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை அரசாங்கம் விதித்துள்ளது. அதன் விளைவாக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட கோடிக்கணக்கான யூசர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒரு சில காரணங்களால் கணக்குகள் முடக்கப்படும். இதை பற்றிய மாதாந்திர அறிக்கைகளை ஒவ்வொரு நிறுவனமும் வழங்க வேண்டும் என்பதும் கட்டாயம்.

சமீபத்தில், வாட்ஸ்அப் நிறுவனம், என்ன காரணங்களுக்காக வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படலாம் என்பது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாதாந்திர யூசர் பாதுகாப்பு அறிக்கை என்ற அறிக்கையை ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வெளியிடும். இதில் ஆகஸ்ட் மாதம் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது.

இது இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு பற்றிய அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது! வாட்ஸ்அப் குழுக்களில் போலியான செய்திகளை அனுப்புவதன் பெரும்பாலான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பாம் செய்திகள் என்று தொடர்ச்சியாக செய்திகள் ஃபார்வார்டு செய்து கொண்டே இருப்பது, குழுக்களில் போலியான செய்திகள் அனுப்புவது, ஒருவர் மீது வெறுப்பை உமிழ்வது போன்றவை முக்கியமான காரணங்களாக கூறப்படுகிறது.

தெரியாமல் நீங்கள் செய்தால் கூட, கணக்கு ப்ளாக் செய்யப்படலாம். “உங்களுக்கே தெரியாமல் கூட வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை விதிமுறைகளை நீங்கள் மீறினால், உங்கள் கணக்கு முடக்கபப்டும். உதாரணமாக, ஸ்கேம், போலியான மெசேஜ்கள், ஒரு சமூகத்தை தாக்கும் செய்திகள், உள்ளிட்ட மற்றவர்களை பாதிக்கக்கூடிய, ஏமாற்றக்கூடிய ஆபத்து அல்லது அச்சத்தை ஏற்படுத்தும்படியான எந்த செய்திகளை நீங்கள் அனுப்பினாலும், உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு பிளாக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளது” என்று தெரிவித்தது.

Also Read : எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு செய்தி ஸ்பாம் செய்தியா என்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. நீங்கள் ‘காலை வணக்கம்’ என்று சாதாரண செய்தியை பல வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் ஃபார்வார்ட் செய்தால் கூட உங்கள் கணக்கு பாதிக்கப்படும்.

சரி, உங்கள் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

கண்மூடித்தனமாக செய்திகளை ஃபார்வார்ட் செய்யாதீர்கள் :

வாட்ஸ்அப்பில் செய்திகள் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை மற்றவர்களுக்கு ஃபார்வார்ட் செய்யும் முன்பு, அது பொய்யா உண்மையா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ்அப் செய்திகளை இத்தனை முறைதான் ஃபார்வர்ட் செய்ய முடியும் என்று ஒரு வரம்பு இருக்கிறது. எனவே உங்களுக்கு வரும் எல்லா செய்திகளையும், கண்ணை மூடிக்கொண்டு ஃபார்வேர்டு செய்யாதீர்கள்.

Also Read : இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகளை மறைக்க வேண்டுமா.? இதோ உங்களுக்கான டிப்ஸ்.!

பல்காக அல்லது தானியங்கி செய்தியை அனுப்பாதீர்கள், ஆட்டோ-டயலில் கால் செய்யாதீர்கள் :

உங்களுக்கு வரும் செய்திகளை ஃபார்வர்ட் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், மொத்தமாக செய்திகளை அனுப்பாதீர்கள். அதே போல, தானியங்கி முறையில் செய்திகளை அல்லது தானியங்கி முறையில் கால் செய்து கொண்டே இருக்காதீர்கள். மேலே கூறியுள்ளது போல, வாட்ஸ்அப் பயன்படுத்தும் டெக்னாலஜி, இதை கண்டறியும் திறன் கொண்டது.

பிராட்காஸ்ட் லிஸ்ட்டை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துங்கள் :

ஒரு செய்தியை பலருக்கும் ஒரே நேரத்தில் அனுப்ப, வாட்ஸ்அப்பில் பிராட்காஸ்ட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். ஆனால், அடிக்கடி பிராட்காஸ்ட் வழியே நீங்கள் செய்திகளை அல்லது உங்கள் வணிக சேவைகள் அல்லது தயாரிப்புகளை அனுப்பினால், உங்கள் மெசேஜ்களை பெறுபவர்கள் உங்கள் கணக்கை புகார் அளிக்கலாம்.

Also Read : ட்விட்டரில் இனி இந்த தொல்லை இருக்காது.. வருகிறது புது அப்டேட்...!!

குழுவில் சேர்ப்பதற்கு முன் அனுமதி கேட்கவும் :

குடும்பம், நண்பர்கள் முதல் பெரிய அளவிலான வணிகங்கள் வரை, வாட்ஸ்அப்பில் குழுக்கள் உள்ளன. ஆனால், ஒரு நபரை குழுவில் சேர்ப்பதற்கு முன்பு, அவரின் அனுமதி கேட்கவும்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, WhatsApp