ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!

திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!

Twitter

Twitter

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பராக் அக்ரவால் கூட தனது ஃபாலோயர்ஸ் பட்டியலில் குறிப்பிடத்தக்க இழப்பை கண்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ட்விட்டர் யூஸர்கள் பலரும் டிசம்பர் 2ம் தேதி முதல் பெரிய அளவில் தங்கள் ஃபாலோயர்ஸை இழந்து விட்டதாக புகார் செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக நேற்று பல ட்விட்டர் யூஸர்கள் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறி வருகின்றனர். சில யூஸர்கள் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர், இன்னும் சிலர் 1000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸை இழந்துள்ளனர்.

திடீரென்று ட்விட்டரில் தங்களது ஃபாலோயர்ஸ் குறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள யூஸர்கள் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பராக் அக்ரவால் கூட தனது ஃபாலோயர்ஸ் பட்டியலில் குறிப்பிடத்தக்க இழப்பை கண்டுள்ளார்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால் மிகுந்த குழப்பம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு ட்விட்டர் போட்ஸ், ஸ்பேம் கன்டன்ட் மற்றும் செயலற்ற அக்கவுண்ட்ஸ்கள் கொண்ட தனது பிளாட்ஃபார்மை செய்ய இதே போன்ற ஒரு நடைமுறையை (exercise) மேற்கொண்டது.

Also read:  சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

அப்போது இது பற்றி விளக்கமளித்த ட்விட்டர், "அவ்வப்போது சில ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்களை யூஸர்கள் கவனிக்கலாம். அவர்களின் பாஸ்வேர்ட் அல்லது தொலைபேசி எண்ணை உறுதிப்படுத்த நாங்கள் கேட்ட அக்கவுண்ட்ஸ்கள், அந்த தகவலை உறுதிப்படுத்தும் வரை ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் சேர்க்கப்படாது. எங்களது இந்த நடைமுறை ஸ்பேமை தடுக்கவும், எல்லா ட்விட்டர்அக்கவுண்ட்ஸ்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் தொடர்ந்து உதவும்" என்று சொல்லி இருந்தது.

இதன்படி ட்விட்டர் யூஸர்களின் தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்டை மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு யூஸர்களின்ன் அக்கவுண்ட்ஸ்களையும் தொடர்ந்து சரிபார்க்கிறது. நிறுவனம் கேட்கும் விவரங்கள் குறிப்பிட்ட யூஸரால் உறுதி செய்யப்பட்ட பிறகு மட்டுமே ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் அந்த நபர் சேர்க்கப்படுவார். எந்தவொரு ஸ்பேம் கன்டன்ட்டையும் யூஸர்கள் சந்திப்பதைத் தடுக்கும் நோக்கில் மேற்கண்ட இந்த நடைமுறையை ட்விட்டர் அடிக்கடி செய்கிறது.

Also read:  பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்துகள் அதிகரிக்கின்றன - பெண் எம்.பி சர்ச்சை பேச்சு

ஒரு யூஸர் அக்கவுண்ட் அதன் விவரங்களை உறுதிப்படுத்தும் வரை, ட்விட்டர் குறிப்பிட்ட அந்த அக்கவுண்ட்டை ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் காட்டாது என்பதால் தான்  பல ட்விட்டர் யூஸர்கள் தங்களது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் வீழ்ச்சியை கண்டுள்ளனர். நிறுவனம் கேட்டபடி விவரங்களை குறிப்பிட்ட யூஸர் அளித்து தங்கள் அக்கவுண்ட் தான் என உறுதி செய்த பிறகு பல யூஸர்களின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சமீபத்தில் ட்விட்டர் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு யூஸர் மற்றொரு நபரின் வீடியோ அல்லது படத்தை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது என்பதாகும். ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அக்ரவாலை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Twitter