ஓப்பன் சேலில் விற்பனைக்கு வந்தது ரியல்மியின் மலிவான C2 ஸ்மார்ட்ஃபோன்..!

ரியல்மி தளத்தில் C2 வாங்கும் வாடிக்கையாளர்கள் 10 சதவிகித கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 21, 2019, 4:20 PM IST
ஓப்பன் சேலில் விற்பனைக்கு வந்தது ரியல்மியின் மலிவான C2 ஸ்மார்ட்ஃபோன்..!
ரியல்மி C2
Web Desk | news18
Updated: July 21, 2019, 4:20 PM IST
ரியல்மி நிறுவனத்தின் மிகவும் விலை மலிவான ஸ்மார்ட்ஃபோனாக உள்ள C2 தற்போது ஓப்பன் சேலில் விற்பனைக்கு வந்துள்ளது.

சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ரியல்மி தனது விலை குறைவான C2 ஸ்மார்ட்ஃபோனை ஓப்பன் சேலில் விற்பனக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான C2, இதுவரையில் ஃப்ளாஷ் சேலில் மட்டுமே விற்பனைக்கு இருந்தது.

C2 ஸ்மார்ட்ஃபோன் மூன்று ரகங்களில் விற்பனைக்கு உள்ளன. 2ஜிபி ரேம் + 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 5,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. இதேபோல், 2ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 6,999 ரூபாயும் 3ஜிபி ரேம்+ 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 7,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளன.


தற்போது ரியல்மியின் அதிகாரப்பூர்வ விற்பனைத் தளமான realme.com மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் C2 விற்பனைக்கு உள்ளது. ரியல்மி தளத்தில் C2 வாங்கும் வாடிக்கையாளர்கள் 10 சதவிகித கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டைமண்டு ப்ளாக் மற்றும் டைமண்டு ப்ளூ ஆகிய இரு நிறங்களில் C2 உள்ளது. 4ஜி எல்டிஇ, ப்ளுடூத் 4.2, வைஃபை, 13+2 மெகாபிக்சல் கொண்ட கேமிரா ஆகியவை C2 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

மேலும் பார்க்க: பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் அறிமுகமாகிறது ஓப்போ K3..!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...