ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்

ரியல்மீ ஸ்மார்ட் போன் தயாரிப்பளர்களின் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்
ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச்
  • Share this:
ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது இதய துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க முடியும். மேலும் SpO2 கருவி மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்கலாம். ஸ்மார்ட் போனுடன் இணைப்பில் இருப்பதால் அழைப்புகள் ,மெஸேஜ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் சேவைகளை பயன்படுத்த முடியும்.

ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் - ன் வடிவமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது. இந்த சாதனம் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 1.4' இன்ச் கொண்ட 320x320 பிக்சல்கள் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ppg சென்ஸார் உடன் ip68 தரச்சான்று பெற்றுள்ளதால் தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 3,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading