Home » News » Technology » REALME WATCH S WITH 15 DAY BATTERY LIFE HEART RATE MONITORING LAUNCHED PRICE SPECIFICATIONS AND MORE VIN GHTA

அட்டகாசமான அம்சங்களுடன் Realme Watch S ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

கூடுதலாக, பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச் வழியாக இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனில் படங்களை எடுக்கவும், இசையை கட்டுப்படுத்தவும் முடியும். ஸ்லீப் மானிட்டர், உங்கள் போனை கண்டுபிடி,(find your phone) நினைவூட்டல் மற்றும் தியானம் என பல அம்சங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் Realme Watch S ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
Realme Watch S
  • News18
  • Last Updated: November 4, 2020, 4:43 PM IST
  • Share this:
நீங்கள் மிகவும் பிஸியான நபர் என்றால், பல வேலைகளை ஒன்றாக செய்வதானால் போன் அழைப்புகளை தவறவிடுவது மிகவும் இயல்பானது, ஆனால் நீங்கள் ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை கொண்டிருந்தால் யாராவது உங்களை அழைக்கும்போது அல்லது உங்களுக்கு மெசேஜ்களை அனுப்பும்போது ஸ்மார்ட்வாட்ச்கள் அதிர்வு தருகின்றன. மற்றொரு நன்மை என்னவென்றால், நீங்கள் செய்யும் உடற்பயிற்சி சார்ந்த பலவற்றை இந்த ஸ்மார்ட்வாட்சுகள் கண்காணிக்கும். ரியல்மி தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்சான Realme Watch Sஐ வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் ஏழு மாதங்களுக்கு முன்னர் சாதாரண வாட்ச் மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில்,தற்போது ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. தற்போது, Realme Watch S தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கிறது, மேலும் இந்த சீன தொழில்நுட்ப நிறுவனம் அதன் உலகளாவிய நாடுகளில் இந்த வாட்ச் கிடைக்கும் விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.  இது ஒற்றை வண்ண கருப்பு நிறத்தில் சுமார் ரூ. 7,000க்கு விலையுடன் வருகிறது.

Realme Watch S ஆனது 1.3 அங்குல வட்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, இது சுய பிரகாசம் மற்றும் தொடு கட்டுப்பாடுகளை (Touch controls) கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 360x360 பிக்சல்கள் ரிசொலூஷன்ஸ் மற்றும் 600 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரே முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. 


புதிய Realme Watch S இன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் இதய துடிப்பு அமைப்பு, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு ஆகியவை அடங்கும். இது பயனரின் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கக்கூடிய இரத்த ஆக்ஸிஜன் மானிட்டரையும் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த சாதனம் ஒரு மருத்துவ கருவி அல்ல, இதில் கிடைக்கும் தரவுகளை மருத்துவ சிகிச்சை அல்லது நோயறிதலுக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று ரியல்மி எச்சரிக்கிறது. 

Also read... அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் BMW X3 M - விலை தெரியுமா?



இப்போது Fitbit Vers, a 2, Apple Watch Series 6, Garmin Venu, and Galaxy Watch 3 உள்ளிட்ட பல ஸ்மார்ட்வாட்சுகள் இரத்த ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கிறது. Realme Watch Sல் உள்ள 16 விளையாட்டு முறைகள் Stationary Bike, Cricket, Indoor Run, Outdoor Cycle, Strength Training, Football, Yoga, and Elliptical மற்றும் பலவற்றை இதில் கண்காணிக்க முடியும்.எதிர்பார்த்தபடி, ஸ்மார்ட்வாட்ச் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற பல ஆப்ஸ்களிலிருந்தும் நோட்டிபிகேஷனை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச் வழியாக இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனில் படங்களை எடுக்கவும், இசையை கட்டுப்படுத்தவும் முடியும். ஸ்லீப் மானிட்டர், உங்கள் போனை கண்டுபிடி,(find your phone) நினைவூட்டல் மற்றும் தியானம் என பல அம்சங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது.  சர்குலர் டயலானது, அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் பயனர்கள் அதன் லிக்விட் சிலிகான் பட்டைகளை வெவ்வேறு வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம். Realme Watch S 390 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இது 48 கிராம் எடையுடன் உள்ளது.
First published: November 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories