ஓப்போ பாதி... ஆப்பிள் பாதி... கலவையான தோற்றத்தில் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்!

இதற்கடுத்து ரியல்மி இயர்பட்ஸ், ஃபிட்னஸ் பேண்ட், ஸ்மார்ட் டிவி என அதிரடி அறிமுகங்களுக்குத் தயாராகி வருகிறது ரியல்மி.

ஓப்போ பாதி... ஆப்பிள் பாதி... கலவையான தோற்றத்தில் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்!
ரியல்மி
  • Share this:
ஓப்போ வாட்ச் மற்றும் ஆப்பிள் வாட்ச் என இரண்டின் கலவையாக ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் தோற்றம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் விரைவில் வெளி வர உள்ள ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் குறித்த தோற்ற அறிமுகத்தை இன்று ரியல்மி இந்தியாவின் சிஇஓ மாதவ் சேத் வெளியிட்டார். ஸ்மார்ட் வாட்ச் குறித்த சிறப்பம்சங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

ரப்பர் ஸ்ட்ராப் உடன் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் போன்றே சதுர வடிவிலான டிஸ்ப்ளே கொண்டுள்ளது புதிய ரியல்மி வாட்ச். ஆனால், இயக்க அடிப்படைகள் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் ஆகத் தெரிகின்றன.


இந்த மாத தொடக்கத்தில் வெளியான ஓப்போ வாட்ச் 1.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, க்வால்கம் ஸ்நாப்ட்ராகன் 2500 ப்ராசஸர், 1ஜிபி ரேம், 8 ஜிபி ஸ்டோரேஜ், இ-சிம், என்எஃப்சி கனெக்‌ஷன் என அசத்தலாய் இருந்தது.

தற்போது ஸ்மார்ட்போன் சந்தையையும் தாண்டி ரியல்மி இந்தியாவில் விரிவடைய நினைப்பதால் இத்தகைய அறிமுகங்கள் தொடர்ந்து இருக்கும் என்கிறார் மாதவ் சேத். இதற்கடுத்து ரியல்மி இயர்பட்ஸ், ஃபிட்னஸ் பேண்ட், ஸ்மார்ட் டிவி என அதிரடி அறிமுகங்களுக்குத் தயாராகி வருகிறது ரியல்மி.

மேலும் பார்க்க: நெட் டேட்டா காலியாகிவிடுகிறதா? வாட்ஸ்அப் மூலம் உங்கள் டேட்டா-வை மிச்சப்படுத்துங்கள்
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்