ஆப்பிள்-க்குப் போட்டியாக ரியல்மி வெளியிடும் வயர்லெஸ் ‘இயர்பாட்ஸ்’..!

டிசம்பர் மாதம் நிறைவதற்குள் ரியல்மி சார்பில் பெருமளவு புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நிறைவதற்குள் ரியல்மி சார்பில் பெருமளவு புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆப்பிள் இயர்பாட்ஸ்-க்குப் போட்டியாக இதர ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு உதவும் வகையில் ரியல்மி வயர்லெஸ் இயர்பாட்ஸ்-களை அறிமுகம் செய்துள்ளது.

  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரியல்மி இந்திய சிஇஓ மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரியல்மி சார்பில் வயர்லெஸ் இயர்பாட்ஸ் விரைவில் வெளியாகும் என ரியல்மி X2 ப்ரோ வெளியீட்டு விழாவிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதனது புகைப்படத்தையும் மாதவ் சேத் வெளியிட்டுள்ளார்.

  ரியல்மி XT 730G உடன் இப்புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பாட்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்பிள் இயர்பாட்ஸ் போலவே ரியல்மி உடையதும் தோற்றமளிக்கிறது. தற்போதைய சூழலில் ரியல்மியின் மஞ்சள் நிறத்திலேயே அதனது இயர்பாட்ஸ் நிறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்த டிசம்பர் மாதம் நிறைவதற்குள் ரியல்மி சார்பில் பெருமளவு புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் பார்க்க: பென்ஸ் காருக்குப் போட்டியாக களம் இறங்கும் கியாவின் Carnival MPV...!
  Published by:Rahini M
  First published: