ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு 13 உடன் வெளியாக உள்ள ரியல்மி... எப்போது தெரியுமா.?

ஆண்ட்ராய்டு 13 உடன் வெளியாக உள்ள ரியல்மி... எப்போது தெரியுமா.?

ரியல்மி

ரியல்மி

Realme Android 13 Smartphones | இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள ரியல்மி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனைக் கொண்டிருக்கும் என பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜாம்பாவன் ஆன கூகுள் நிறுவனம் சமீபத்தில் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. மெட்டீரியல் யூ தீமிங் , ஆப்களுக்கான மொழி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட பிரைவசி கன்ட்ரோல் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. மெட்டீரியல் யூ தீமிங் ஆப்ஷன் மூலமாக வால்பேப்பரில் உள்ள வண்ணங்களில் எதை நீக்க வேண்டும் என முடிவெடுக்க முடியும்.

இதில் உள்ள per-app languages மூலம் உங்களுக்கு தேவையான மொழிகளை ஒவ்வோர் ஆப்-க்கும் மாற்றிக்கொள்ளலாம், இதற்கும் போனின் பிரதான மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் பிக்சல் 4, பிக்சல் 4 எக்ஸ்எல், பிக்சல் 4 ஏ, பிக்சல் 4 ஏ (5 ஜி), பிக்சல் 5, பிக்சல் 5 ஏ, பிக்சல் 6, பிக்சல் 6 ஏ மற்றும் பிக்சல் 6 ப்ரோ போன்ற மாடல்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை வெளியிட தயாராகி வருவதாக ரியல் மீ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கூகுள் பிக்சல் போன்களைத் தவிர, விரைவில் சாம்சங், நோக்கியா, மோட்டோரோலா, ஒன்பிளஸ், ஓப்போ, ரியல்மி, சியோமி போன்ற பிற ஸ்மார்ட் போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் ரியல்மி அறிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனைக் கொண்டிருக்கும் என பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாடல்களை ரியல்மி வெளியிட திட்டமிட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

ரியல்மி இந்தியா நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் ஆன மாதவ் ஷெத் வெளியிட்டுள்ள பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2022 முதல்:

ரியல்மி ஜிடி 2

ரியல்மி ஜிடி 2 நியோ 3

ரியல்மி ஜிடி 2 நியோ 3 150w

அக்டோபர் 2022 முதல்:

ரியல்மி 9i 5ஜி

ரியல்மி 9 ப்ரோ 5ஜி

ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் 5ஜி

ரியல்மி ஜிடி நியோ 3டி

நவம்பர் 2022 முதல்:

ரியல்மி நார்சோ 50 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி ஜிடி

டிசம்பர் 2022 முதல்:

ரியல்மி ஜிடி நியோ 2 5ஜி

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்

ரியல்மி 8 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி

2023ம் ஆண்டு முதல் காலாண்டு:

ரியல்மி 9 5ஜி

ரியல்மி 9 4ஜி

ரியல்மி 9i 4ஜி

ரியல்மி 8 ப்ரோ

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

ரியல்மி 9 5ஜி ஸ்பீடு எடிஷன்

ரியல்மி 8எஸ் 5ஜி

2023ம் ஆண்டு 2வது காலாண்டு:

ரியல்மி நார்சோ 50

ரியல்மி 8 4ஜி

ரியல்மி 8i

2023ம் ஆண்டு 3வது காலாண்டு:

ரியல்மி சி30

ரியல்மி நார்சோ 50i ப்ரைம்

ரியல்மி சி33

ரியல்மி நார்சோ 50ஏ ப்ரைம்

ரியல்மி சி35

ரியல்மி சி31

Published by:Selvi M
First published:

Tags: Android, RealMe, Technology