• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பட்ஜெட் விலையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் - விலை உட்பட முழு விவரம்

பட்ஜெட் விலையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் - விலை உட்பட முழு விவரம்

Realme

Realme

Realme Smart TV Neo 32-inch டிவியின் விலை இந்தியாவில் ரூ.14,999 ஆகி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

  • Share this:
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிராண்டாக இருக்கும் ரியல்மி நிறுவனம் புதிதாக 2 தயாரிப்புகளை நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் ஒரு தயாரிப்பு ரியல்மி ஸ்மார்ட் டிவி மற்றொன்று ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் (fitness band) ஆகும். இந்நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்மார்ட் டிவியானது ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் (Realme Smart TV Neo 32-inch) என்று குறிப்பிடப்படுகிறது. அதே போல புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஃபிட்னஸ் பேண்ட்டிற்கு, ரியல்மி பேண்ட் 2 (Realme Band 2) என்று பெயரிடப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

* Realme Band 2 ரூ.2,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ் வரும் செப்டம்பர் 27 முதல் Realme.com, Flipkart மற்றும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

* Realme Smart TV Neo 32-inch டிவியின் விலை இந்தியாவில் ரூ.14,999 ஆகி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரியால்மியின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் அக்டோபர் 3 முதல் Realme.com, Flipkart மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி sole Black கலர் ஆப்ஷனில் கிடைக்கும் என்றும், MobiKwik வாலட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி-யை வாங்கும் போது ரூ.350 தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read:  இறந்த பாஜக தலைவரின் உடலை நாயின் சடலத்துடன் ஒப்பிட்ட மம்தா பானர்ஜி!

Realme Band 2 சிறப்பம்சங்கள் :

Realme Band 2 1.4 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே மற்றும் 167x320 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 12.1 மிமீ தடிமன் மற்றும் 27.3 கிராம் எடை கொண்ட இந்த டிவைஸ் செவ்வக வடிவில் வருகிறது. இது 500 நிட்ஸ் பிரைட்னஸை சப்போர்ட் செய்கிறது. இந்த Realme Band 2, 50-க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட டயல் ஃபேஸ்களுடன் (personalised dial faces) வருகிறது. மேலும் இவை அனைத்தும் ரியல்மி லிங்க் ஆப்-பில் இருந்து தேர்வு செய்ய கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மாற்றக்கூடிய ஸ்ட்ராப்ஸ்களுடன் வருகிறது. மேலும் இதில் தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் ரத்த-ஆக்ஸிஜன் நிலை கண்காணிப்பு போன்ற அம்சங்கள் இருக்கிறது. 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ஸை கொண்டுள்ளது. இது தவிர யூஸர்கள் ரியல்மியின் கனெக்டட் டிவைஸ்களான பிளக்ஸ் மற்றும் பல்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்த Realme Band 2 அனுமதிக்கும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 204mAh ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை வர கூடியது.

Also Read:  ‘தவறு செய்தால் கை வெட்டப்படும்’.. தாலிபான்களின் கொடூர தண்டனைகள் விரைவில் அமல்!

Realme Smart TV Neo 32-inch சிறப்பம்சங்கள்:

32-இன்ச் பேனலை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவியில் சிறந்த பட தரம் (picture quality) மற்றும் ஸ்மூத்தான அனுபவத்திற்காக குவாட் கோர் 64-பிட் மீடியாடெக் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் பிளே ஸ்டோரை சப்போர்ட் செய்வதால் பிரபலமான இசை மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். யூடியூப், ஈரோஸ் நவ், மற்றும் ஹங்காமா போன்ற ஆப்ஸ்கள் இதில் ப்ரீ-லோடட்டாக இருக்கின்றன.

இதில் 2 HDMI போர்ட்கள், USB டைப்-ஏ போர்ட், ஏவி போர்ட் மற்றும் லேன் போர்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் இரண்டு 10W ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி ஆடியோ டெக்னலாஜி இருக்கிறது. இந்த டிவியில் இன்-பில்ட் குரோம்கேஸ்ட் உள்ளது. இந்த அம்சம் மொபைல் கேம்களை விளையாட அல்லது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து நேரடியாக வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. 2.4GHz Wi-Fi சப்போர்ட் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: