HOME»NEWS»TECHNOLOGY»realme narzo 30 pro narzo 30a specifications india launch date tipped vin ghta
Realme Narzo 30 Pro, Narzo 30Aன் அட்டகாசமான சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே உள்ளது. இது ஒரு AMOLED டிஸ்ப்ளேவாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது, ஏனெனில் நார்சோ 20 ப்ரோ X7 ஐ விட மலிவான போனாக இருக்க வேண்டும்,
இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே உள்ளது. இது ஒரு AMOLED டிஸ்ப்ளேவாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது, ஏனெனில் நார்சோ 20 ப்ரோ X7 ஐ விட மலிவான போனாக இருக்க வேண்டும்,
Realme நிறுவனம் அதன் X7 தொடருக்குப் பிறகு இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய அறிமுகத்தில் செயல்படுகிறது, அதுதான் Realme Narzo 30 Pro. ஒரு சோசியல் போஸ்ட் மூலம் ரியல்மி நிறுவனம், நார்சோ 30 ஸ்மார்ட்போன்களுக்கு எந்த ரீடெயில் பாக்ஸை நீங்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று அதன் ரசிகர்களிடம் கேட்டுள்ளது. ரியல்மி கம்யூனிட்டி அதிகாரி ஒருவர் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளார். அதில் "எங்கள் முடிவுகளை நாங்கள் எடுப்பதில்லை மாறாக எங்கள் ரசிகர்களால் எடுக்கப்படுகின்றன, நாங்கள் நார்சோவிற்கும் அவ்வாறே செய்கிறோம்.
நார்சோ சாதனத்திற்காக தயாரிக்கப்பட்ட பாக்ஸ்கள் இப்போது கிடைத்துள்ளது, அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவ வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலமே, நார்சோ 30 தொடருக்கான ரீடெயில் பாக்ஸை ரியல்மி நிறுவனம் இறுதி செய்யும், அதாவது எந்த விருப்பம் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறதோ அதுவே வரவிருக்கும் நார்சோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸாக மாறும்.
சிறப்பம்சங்கள்:
Realme Narzo 30 Pro ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~405 ppi அடர்த்தி) டிஸ்பிளேயுடன், ஆக்டா கோர் பிராசஸருடன் ஆக்டா கோர் பிராசஸருடன் கூடிய 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் உள்ளடக்கச் சேமிப்புடன் வருகிறது. Realme Narzo 30 Pro 48 மெகா பிக்சல் கொண்ட மெயின் கேமரா மற்றும் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவுடன் வருகிறது. லித்தியம்-அயன் 4880 எம்.ஏ.எச் பில்ட் இன் லித்தியம் பேட்டரியுடன் USB டைப்-C , போர்ட் வசதியுடன் வருகிறது.
சென்சார்களை பொறுத்த வரையில் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி போன்றவை உள்ளன. மற்ற அம்சங்களாக 65W SuperDart சார்ஜிங், ஃபேஸ் அன்லாக் வேற லெவலில் உள்ளது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் கலர் விருப்பத்தில் கிடைக்கும். செவ்வக பின்புற கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ரியல்மி நார்சோ 30 தொடரில் மூன்று சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
ரியல்மி நார்சோ 30 தொடரில் ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30A ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுவதற்கான போதுமான அறிக்கைகள் இல்லையென்றாலும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நார்சோ 30 ப்ரோ வில் பெரிய டிஸ்ப்ளே, சிறந்த கேமராக்கள், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். நார்சோ 30 ப்ரோ மீடியா டெக் டைமன்சிட்டி 800U செயலியை கொண்டுள்ளது., இது Realme X7 ஐ இயக்குகிறது. நார்சோ 30 ப்ரோ ஆனது 5G போனாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே உள்ளது. இது ஒரு AMOLED டிஸ்ப்ளேவாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது, ஏனெனில் நார்சோ 20 ப்ரோ X7 ஐ விட மலிவான போனாக இருக்க வேண்டும், இதன் விலை ரூ .19,999 என இருக்கலாம். X7 இல் AMOLED டிஸ்ப்ளே இருந்தாலும், அதிக புதுப்பிப்பு வீதம் இல்லை. எனவே சமநிலைப்படுத்த, Realme நர்சோ 30 ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் எல்சிடி இருக்கக்கூடும். இதுபோன்று இன்னும் சில சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. கூடிய விரைவில் இந்த மொபைல் வெளியாகும் தேதி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.