7 மாதங்களில் 4 மில்லியன் ரசிகர்கள்...! உற்சாகத்தில் Realme

Realme ஸ்மார்ட்ஃபோன் நிறுவனத்தின் வளர்ச்சி 600 சதவிகிதமாக இருந்தததாக சைபர் மீடியா ஆய்வு கூறுகிறது.

Web Desk | news18
Updated: January 4, 2019, 1:08 PM IST
7 மாதங்களில் 4 மில்லியன் ரசிகர்கள்...! உற்சாகத்தில் Realme
Realme-U1
Web Desk | news18
Updated: January 4, 2019, 1:08 PM IST
சீனாவின் Realme ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமான 7 மாதங்களிலேயே 4 மில்லியன் பயனாளர்களைச் சென்று அடைந்துள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Realme ட்விட்டர் பக்கத்தில், “புத்தாண்டை மிகச்சிறப்பாகத் தொடங்கி உள்ளோம். Realme குடும்பம் 4 மில்லியன் ஆக வலுவடைந்துள்ளது. உங்கள் அன்புக்கு நன்றி. 2019-ம் ஆண்டில் இன்னும் பெரிதாகவும் சிறப்பாகவும் வளர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளது Realme.

2018 மே மாதம் ஸ்மார்ட்ஃபோன் உலகில் Realme 1 மூலம் பிரபலமடைந்த நிறுவனம் இன்று இந்தியாவில் 20 ஆயிரம் கடைகளைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சுமார் 150 நகரங்களைச் சென்ரடையும் வகையில் 2019-ல் Realme விரிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Realme-யின் அத்தனைத் தயாரிப்புகளும் நாட்டில் உள்ள அனைத்து அவுட்லெட்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சைபர் மீடியா ஆய்வின் அடிப்படையில் Realme ஸ்மார்ட்ஃபோனின் விற்பனை செப்டம்பர்- அக்டோபர் கால இடைவெளியில் மட்டும் 600 சதவிகிதம் அதிகரித்து இந்தியாவின் டாப் நிறுவனமாக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஓப்போவின் துணை நிறுவனமாகக் களமிறங்கிய Realme இன்று தனியாகப் பிரிந்து சர்வதேச ப்ராண்ட் ஆக வளர்ந்து வருகிறது.

மேலும் பார்க்க: கர்பிணியை தாக்கியதாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு...!
Loading...
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...