ஜியோமி-க்குப் போட்டியாக ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ரியல்மி..!

”சமீபத்தில் இந்தோனேஷிய ட்ரேட்மார்க் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்-க்கான பெயர்ப்பதிவு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகின”

ஜியோமி-க்குப் போட்டியாக ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ரியல்மி..!
ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் (Image: Screen Grab/ Madhav Sheth/Realme/ YouTube)
  • News18
  • Last Updated: January 27, 2020, 1:36 PM IST
  • Share this:
ரியல்மி நிறுவனம் புதிதாக ஜியோமி-க்குப் போட்டியாக ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் வருகிற பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி பேண்ட் குறித்த அப்டேட்ஸ்களை தொடர்ந்து டீசர் வடிவில் ரியல்மி நிறுவனம் அவ்வப்போது வழங்கி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் ஃபிட்னஸ் பேண்ட் வரிசையில் ஜியோமி, ஹானர், ஹீவே ஆகிய நிறுவனங்களின் பேண்ட்கள் முன்னிலையில் உள்ளன.

ஆனால், இவை அனைத்துக்கும் ரியல்மி பேண்ட் போட்டியாக இருக்கும் என ரியல்மி நிறுவன சிஇஓ மாதவ் சேத் தெரிவித்துள்ளார். ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட்-க்கு அடுத்தபடியாக ரியல்மி X50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு அறிமுகம் ஆக உள்ளது. கூடுதலாக வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த மாத வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது.


சமீபத்தில் இந்தோனேஷிய ட்ரேட்மார்க் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்-க்கான பெயர்ப்பதிவு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனால், விரைவில் ஸ்மார்ட் வாட்ச் பிரிவிலும் ரியல்மி கலக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: உங்கள் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானதா...? ஆன்லைன் பாதுகாப்புக்கு என்ன வழி..?
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்