விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் - முழு விவரம் இங்கே!

ரியல்மி ஜிடி நியோ 2

இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
சமீபத்தில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது ரியல்மி ஜிடி Neo 2 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசி சீனாவில் அறிமுகமாகும் என்றால் சில நாட்களுக்கு பின்னர் உலகளாவிய சந்தைகளுக்கான மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுவது குறித்த விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் வெளியீட்டு தேதி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அடுத்த மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான தகவலின் படி, பின்புறம் 64 எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம் டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செல்பி களுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16 எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இது இரண்டு பெரிய சென்சார்கள் மற்றும் ஒரு சிறிய சென்சார் உடன் வருவதாக தெரிகிறது, இதனால் மேக்ரோ புகைப்படம் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. முதல் தலைமுறை Realme GT Neo மே 2021ல் Realme X7 Max 5G என இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரவிருக்கும் Realme GT Neo 2 ஸ்மார்போன் சாம்பல் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Also read... தொலைத்தொடர்பு சேவையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜியோ: நன்றி தெரிவித்த நிறுவனம்!

இது மீடியா டெக் (டைமென்சிட்டி 1200) சிப்செட் போலல்லாமல் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, கைரேகை சென்சார், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: