விற்பனைக்கு வந்த ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன் - விலை, சிறப்பம்சங்கள் இங்கே!

ரியல்மி ஜிடி 5 ஜி

கேமரா வசதியை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
ஒன்பிளஸ் மற்றும் எம்.ஐ வரிசையில் 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் வருகை, மொபைல் மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus 9R மற்றும் iQOO 7 லெஜண்ட், எம்.ஐ 11X புரோ ஆகிய 5 ஜி ஸ்மார்ட்போன்கள் 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால், ரியல்மியின் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை அறிய சந்தையில் போட்டி நிலவியது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி நண்பகலில் ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில், ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2 மாடல்களில் வெளிவந்துள்ள ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் தொடக்க விலை 37,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி உள்ளது. மற்றொரு மாடல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 41,999. ரியல்மியின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் Dashing Blue மற்றும் Dashing Silver நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரியல்மி வலைதளத்தில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் இ.எம்.ஐ ஆப்சனில் ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும். இவற்றுடன் கூடுதலான சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன், யூசர்களின் பிரண்ட்லியாக இருக்கும். அதாவது பயன்படுத்துவதற்கு கடினமாக இல்லாமல் எளிமையான ஆப்சன்களைக் கொண்டிருக்கும்.

Also read... Paytm App மூலம் மின்சார கட்டணம் செலுத்தினால் கேஷ்பேக் உறுதி - ஆனால் ஒரு கண்டிஷன்!

கேமரா வசதியை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுட்டன், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் ஆகியவை இணைப்பாக கொடுக்கப்படுகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: