எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் Realme GT 5G ! மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்

மாதவ் ஷேத்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் GT தொடரை மிகவும் வலுவாக பிராண்டாக மாற்ற ரியல்மி விரும்புவதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
ரியல்மி GT 5G இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 888- ப்ராசசாரில் இயங்கும் மலிவு விலை தொலைபேசியாக இருக்கும் என்று ரியல்மி இந்தியாவின் தலைவரும் ஐரோப்பா தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ் ஷேத் தனது சமீபத்திய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அதில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 உடன் Realme GT 5G "இதுவரை இல்லாத விலையில் வரும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலிவான முதன்மை தொலைபேசியான Mi 11X ப்ரோவை அறிமுகப்படுத்திய சியோமி-க்கு எதிரான ஒரு தந்திரமான தாக்குதல் தான் இது என்றும் கூறப்படுகிறது.

மாதவ் ஷேத் தனது பதிவு மூலம் கூறுவது என்னெவென்றால், GT 5G என்பது Mi 11X ப்ரோவை விட மலிவானதாக இருக்கும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலை கொண்ட ஃபோனாக GT 5G இருக்கும் என்று கூறியுள்ளார். ஷேத் முன்பு இந்தியா டுடே டெக் நிறுவனத்திடம் பேசும் போது, இந்தியாவில் Realme GT 5G-யின் விலை ரூ. 30,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் ட்விட்டரில் ஷேத் குறிப்பிட்டதன் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Realme GT 5G அந்நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான தொலைபேசி ஆகும். ஏனெனில் இது GT தொடரை முன்னிலைப்படுத்துகிறது. இது இப்போது இந்தியாவில் எக்ஸ்-சீரிஸுக்கு மாற்றாக அமையும் என்றும் இந்த ஆண்டிற்கான முதன்மை தொலைபேசியாக இது இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு குறைந்த விலையை நிர்ணயிப்பது முக்கியம். ஏனெனில் சியோமியின் Mi 11X ப்ரோ ஒரு பிரபலமான போன் மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிக விற்பனையை சந்தித்து வருகிறது.

உண்மையில், Mi 11X எக்ஸ் ப்ரோவை விட அதிக விலை கொண்ட Mi 11 அல்ட்ரா, இந்த ஆண்டு சியோமியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசியாகும். Mi 11X ப்ரோ தவிர, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 888-ப்ராசசரில் இயங்கும் மற்ற பிற ஸ்மார்ட்போன்களும் உள்ளன. அவற்றில் iQOO 7 லெஜண்ட் போனும் ஒன்று, இதன் விலை ரூ.39,999 ஆகும். இதுதவிர ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ போன்களின் விலை ரூ.49,999 இல் தொடங்குகிறது. மேலும் இந்த ப்ராசசரில் இயங்கும் ஆசஸ் ROG தொலைபேசி 5 கேமிங் போன் ரூ.49,999 விலையில் விற்பனையாகிறது.

ரியல்மி மொபைலை பொறுத்தவரை, மேற்கண்ட தொலைபேசிகளின் விலையை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இந்தியாவில் GT சீரிஸை வெற்றிகரமாக மொபைல் சாதனமாக மாற்றுவதே நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் GT தொடரை மிகவும் வலுவாக பிராண்டாக மாற்ற ரியல்மி விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதனால்தான் நான்கு GT சீரிஸ் தொலைபேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

GT 5 G ஜூன் மாதம் ஐரோப்பாவில் 499 யூரோ டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.44,000 ஆகும். இது ட்விட்டரில் சேத் டீஸ் செய்ததை விட மிக அதிக விலை தான். இருப்பினும், ​​ரியல்மி GT 5 G -யின் சீன விலையைப் பார்க்கும் போது, இது CNY 2,599-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்!

இது மிகவும் யதார்த்தமான விலை. 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக ரியல்மி அதன் விலையை குறைந்துள்ளதாக இந்தியா டுடே டெக் உடன் பேசியபோது ஷேத் அதை மீண்டும் உறுதிப்படுத்தினார். ரியல்மி GT 5 G இந்தியாவின் பிரீமியம் சந்தையில் ஒரு முக்கியமான தொலைபேசியாக இருக்கப் போகிறது என்றும் நிறுவனம் சில பிராண்டுகளையும் அவர்களின் தொலைபேசிகளையும் தங்கள் நிர்ணயித்த விலையில் இயக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: