• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Realme GT: தீபாவளிக்கு முன்னதாக அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

Realme GT: தீபாவளிக்கு முன்னதாக அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்

பல ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வருடாந்திர தீபாவளி விற்பனையின் போது ஸ்மார்ட்போன் விற்பனையை அதிகரிக்க பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வார்கள்.

  • Share this:
ரியல்மி ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் ப்ராசெஸ்சார் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற தகவலை ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் மறுத்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஸ்னாப்டிராகன் 888 ப்ராசெஸ்சார் கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளிக்கு சற்று முன்னதாக வெளியாகும் என கூறியுள்ளார்.

தீபாவளி திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வருடாந்திர தீபாவளி விற்பனையின் போது ஸ்மார்ட்போன் விற்பனையை அதிகரிக்க பல்வேறு அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வார்கள். ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் மார்ச் 2021ல் சீனாவில் அறிமுகமானது நிலையில் கடந்த வாரம் இங்கிலாந்தில் விற்பனையை தொடங்கியது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனில் வைஃபை 6, 120Hz டிஸ்ப்ளே, மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. சீனாவில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.32,100-ஆக உள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி மாடலின் விலை ரூ.49,600-ஆக உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் தோராயமாக ரூ. 44,30 என்ற விலையில் உள்ளது.

Also read... Samsung Galaxy S21 FE: சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுத்தம் - காரணம் தெரியுமா?

இந்தியாவின் விலை விவரங்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 120Hz refresh rate , 6.43-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் 256 ஜிபி வரை 3.1 யுஎஃப்எஸ் இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பில் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோவிற்காக 16 எம்பி கேமரா உள்ளது. 3.5 மிமீ ஹெட்செட் ஜாக், 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சம் உள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் ரியல்ம் எக்ஸ் 7 மேக்ஸின் ‘milky way’ colour variant ஜூன் 24ம் தேதி அறிமுகப்படுப்படுத்தப்படும் என தகவல் அளித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: