Home /News /technology /

பேப்பர் போன்ற பேக் பேனலுடன் Realme GT 2 Pro அறிமுகம் - விலை, விற்பனை, ஆஃபர் விவரங்கள்.!

பேப்பர் போன்ற பேக் பேனலுடன் Realme GT 2 Pro அறிமுகம் - விலை, விற்பனை, ஆஃபர் விவரங்கள்.!

Realme GT 2 Pro

Realme GT 2 Pro

Realme GT 2 Pro | 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்ட 6.7-இன்ச் பிளாட் 2கே அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில், ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுளள்து. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆனது இதுவரை வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத வடிவமைப்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் ஒரு பேப்பர் ஒயிட் மேற்பரப்பு உள்ளது, அதில் பென்சிலை கொண்டு ஒருவரால் எழுதவோ அல்லது வரையவோ முடியும்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆனது டிசிஓ-வின் சஸ்டெயினிபிலிட்டி சான்றிதழை பெற்றுள்ளது, இது தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் உலகின் முன்னணி "நிலைத்தன்மைக்கான" சான்றிதழாகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது. நினைவூட்டும் வண்ணம், ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆனது கடந்த ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதை தொடர்ந்து ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் மற்றும் அறிமுக சலுகைகள்:

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.49,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது பேப்பர் ஒயிட், பேப்பர் கிரீன் மற்றும் ஸ்டீல் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும்.



அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டுகள் வழியிலான மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.5,000 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஸ்டோரேஜ்களின் விலையை ரூ.44,999 ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் ரூ.52,999 ஆகவும் குறைக்கலாம்.

Also Read : விலை உயர்ந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி?

விற்பனையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 12 மணி (மதியம்) முதல், பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்வபவர்களுக்கு இலவசமாக ரியல்மி வாட்ச் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரே ஃபோனில் பல மொபைல் நம்பர்களை பயன்படுத்தலாம்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்ட 6.7-இன்ச் பிளாட் 2கே அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது.



 

65W சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சோனி ஐஎம்எக்ஸ்766 ஷூட்டர் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Also Read : டிஜிட்டல் மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி.? டிப்ஸ்.!

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டி, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-C போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: RealMe, Technology

அடுத்த செய்தி