Home /News /technology /

புதிதாக வெளியான ரியல்மி GT2 ப்ரோ, ரியல்மி 9 4G ஸ்மார்ட்போன்கள் - சிறப்பம்சங்கள் என்னென்ன.?

புதிதாக வெளியான ரியல்மி GT2 ப்ரோ, ரியல்மி 9 4G ஸ்மார்ட்போன்கள் - சிறப்பம்சங்கள் என்னென்ன.?

realme

realme

Realme GT 2 Pro and Realme 9 4g | இந்திய சந்தையில் பல வித மொபைல் பிராண்ட்கள் போட்டி போட்டு கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதில் ரியல்மி மொபைல்களுக்கு என்று தனி இடம் உள்ளது. குறிப்பாக நீங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல மொபைல் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ரியல்மி மொபைல்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு ஸ்மார்ட்போனா அல்லது கேட்ஜெட்களோ புதிதாக வெளியாகி வருகிறது. அவற்றை வாங்க எல்லா வாரமும் மக்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ரியல்மி GT 2 ப்ரோ, ரியல்மி 9 4G ஸ்மார்ட்போன்கள் புதிதாக வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் பல வித மொபைல் பிராண்ட்கள் போட்டி போட்டு கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அதில் ரியல்மி மொபைல்களுக்கு என்று தனி இடம் உள்ளது. குறிப்பாக நீங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல மொபைல் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ரியல்மி மொபைல்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் சமீபத்தில் வெளியாக உள்ள ரியல்மி GT 2 ப்ரோ, ரியல்மி 9 4G ஸ்மார்ட்போன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

ரியல்மி GT2 ப்ரோ :

இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனானது ஸ்னாப்டிராகன் 8 Gen சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.7 இன்ச் WQHD+ (1440 x 3216 பிக்சல்கள்) LTPO AMOLED டிஸ்ப்ளே தரப்பட்டுள்ளது. மேலும் இதில் 1Hz முதல் 120Hz வரை அளவிடக்கூடிய டைனமிக் ரெபிரஷ் ரேட்டுடன் வருகிறது. கொரில்லா கிளாஸ் விக்டல் பாதுகாப்பு தரப்படுகிறது மற்றும் 1400 நைட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

பின்புறத்தில் சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் கேமிராவானது 50 MP சோனி IMX766 சென்சார் மற்றும் 150-டிகிரி ஃபீல்ட் வியூவுடன் 50 MP அல்ட்ராவைடு ஷூட்டரைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மூன்றாவது சென்சார் 40x மைக்ரோஸ்கோப் லென்ஸ் வசதியுடன் வருகிறது. இது எப்போதும் தரப்படும் மேக்ரோ லென்ஸிற்கு மாற்றாக அமைகிறது. மேலும் முன்புறத்தில் 32 MP சோனி IMX615 செல்ஃபி ஷூட்டர் வழங்கப்படுகிறது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000 mAh பேட்டரியும் வருகிறது.



 

ரியல்மி 9 4ஜி :

360Hz சாம்பிளிங் ரேட் வசதியுடன் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் வருகிறது. அதே போன்று இதில் 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதில் 1000 நைட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. இன்-டிஸ்ப்ளே சென்சார் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் தரப்படுகிறது. அல்ட்ராவைடு கேமரா மற்றும் மேக்ரோ யூனிட்டுடன் 108 MP சான்சங் ISOSCELL HM6 ப்ரைமரி சென்சார் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் சன்பர்ஸ்ட் கோல்டு, ஸ்டார்கேஸ் ஒயிட் மற்றும் மிட்டியார் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.



விலை விவரங்கள் :

ரியல்மி GT 2 ப்ரோ 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.49,999க்கு விற்கப்படுகிறது. அடுத்து ரியல்மி GT 2 ப்ரோ 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.58,999 ஆக உள்ளது. அடுத்து 6ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,999 ஆக உள்ளது. இதில் 8 ஜிபி RAM கொண்ட மொபைலின் விலை 18,999 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 12ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: RealMe, Technology

அடுத்த செய்தி