ரியல்மி நிறுவனத்தின் 4ஆம் ஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நல்ல ஸ்பெஷலான ஸ்மார்ஃபோன்களை அறிமுகம் செய்கிறது அந்த நிறுவனம். அந்த வரிசையில், ரியல்மீ GT 2 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதியன்று நார்ஸோ 50ஏ பிரைம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஏப்ரல் 29ஆம் தேதியன்று ரியல்மீ GT நியோ 3 என்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் விற்பனை :
ரியல்மீ GT 2 என்பது பேப்பர் கிரீன், பேப்பர் ஒயிட் மற்றும் ஸ்டீல் பிளாக் ஆகிய கலர்களில் கிடைக்கும். ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளங்கள் வாயிலாக ஏப்ரல் 28ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்குகிறது.
இந்தியாவில் என்ன விலை?
வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வெர்சன்களில் ரியல்மீ GT 2 வழங்கப்பட உள்ளது. முதலாவதாக 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதி கொண்ட ஃபோன் ரூ.34,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி ஆகிய வசதிகளைக் கொண்ட ஃபோன் ரூ.38,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ரியல் மீ GT 2 ஃபோனில் ஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி. புராசஸர் இடம்பெற்றுள்ளது. இதில், 5,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் உள்ளது. இது, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது. ஆண்டிராய்டு 12 சாஃப்ட்வேரில் இது இயங்குகிறது. சிறப்புமிக்க அனுபவத்தை தரும் வகையில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED டிஸ்பிளே வசதி 120Hz ரெஃபிரெஷ் ரேட் ஆகியவை உள்ளன.
Sony IMX766 சென்சார் கொண்ட 50 எம்பி ரியர் கேமரா உடன் 8 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ யூனிட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஃபோனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. பொதுவாகவே, ரீடெயில் விற்பனையின் போது, ரியல்மீ நிறுவனம் சார்ஜர் வழங்குவதில்லை. இந்த ஃபோனில் பிளாஸ்டிக் பயன்பாட்டை சுமார் 21.7 சதவீதம் குறைத்து மெட்டீரியல் டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
5ஜி வசதி உண்டு:
ரியல்மீ GT 2 ஃபோனில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்புகளை வழங்கும் 4ஜி மற்றும் 5ஜி வசதிகள் உள்ளன. இது தவிர ப்ளூடூத், வை-பை, என்எஃப்சி மற்றும் டைப் சி யுஎஸ்பி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.