ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான புதிய ஸ்மார்ட் ஃபோன் Realme C30.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான புதிய ஸ்மார்ட் ஃபோன் Realme C30.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

Realme C30

Realme C30

Realme C30 | 3GB வரையிலான ரேமை கொண்டுள்ளது Realme C30. 1TB ஸ்டோரேஜ் விரிவாக்கம் மற்றும் 3 தனித்துவ கலர் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது இந்த புதிய மொபைல்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனான Realme C30 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய Realme ஃபோன் 20:9 டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் octa-core Unisoc SoC ப்ராசஸர் மூலம் இயங்குகிறது.

3GB வரையிலான ரேமை கொண்டுள்ளது Realme C30. 1TB ஸ்டோரேஜ் விரிவாக்கம் மற்றும் 3 தனித்துவ கலர் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது இந்த புதிய மொபைல். Redmi 10A, Tecno Spark Go 2022 மற்றும் Samsung Galaxy A03 Core போன்றவற்றுக்கு போட்டியாக இந்த Realme C30 இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் Realme C30 ஃபோனின் விலை:

Realme C30 மொபைல் 2GB மற்றும் 3GB ரேம் வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 2GB ரேம் வேரியன்ட் விலை ரூ.7,499-ஆகவும், 3GB ரேம் வேரியன்ட் விலை ரூ.8,299-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பாம்போ கிரீன், டெனிம் பிளாக், லேக் ப்ளூ உள்ளிட்ட தனித்துவ கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த ஃபோன் வரும் ஜூன் 27 அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. Flipkart, Realme.com மற்றும் நாட்டில் உள்ள ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் இந்த Realme C30 வாங்க கிடைக்கும்.

Realme C30-யின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

Realme C30 மொபைலானது 6.5-இன்ச் ஃபுல்HD+ டிஸ்ப்ளே, 20:9 அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 88.7 சதவிகித ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் Realme UI Go எடிஷனில் Android 11-ல் (Go edition) இயங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த ஃபோன் Unisoc T612 1.82GHz சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 3GB ரேம் மற்றும் 32GB UFS 2.2 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. Realme C30 மொபைல் LED ஃபிளாஷ் கொண்ட ஒரு 8MP ரியர் கேமராவுடன் வருகிறது. இந்த கேமரா HDR போன்ற அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்கு ஏற்ற வகையில் 5MP ஃப்ரன்ட் கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது.

Also Read : ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 2 வருடம் நோ-காஸ்ட் EMI சலுகையை அறிவித்த சாம்சங் நிறுவனம்..!

SD கார்டு ஸ்லாட் மூலம் 1Tb வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜையும் இந்த ஃபோன் சப்போர்ட் செய்கிறது. பிற அம்சங்களில் ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் போர்ட் மற்றும் 4ஜி எல்டிஇ இணைப்பு ஆகியவை அடங்கும். இந்த மொபைலில் இருக்கும் ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light மற்றும் proximity sensor உள்ளிட்டவை அடங்கும். இந்த பட்ஜெட் டிவைஸில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இது 45 நாட்கள் வரை ஸ்டான்ட்பை டைம் வழங்கும் என்று கூறப்படுகிறது. தவிர இந்த ஃபோன் 164.1x75.6x8.5mm அளவுகள் மற்றும் 182 கிராம் எடை கொண்டது.

First published:

Tags: RealMe, Smartphone, Technology