ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அறிமுகமாவதற்கு முன்பே லீக்கான புதிய Realme ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள்!

அறிமுகமாவதற்கு முன்பே லீக்கான புதிய Realme ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள்!

ரூ.15,000-க்கு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாக அடுத்த ஆண்டுதொடக்கத்தில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15,000-க்கு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாக அடுத்த ஆண்டுதொடக்கத்தில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15,000-க்கு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாக அடுத்த ஆண்டுதொடக்கத்தில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • 2 minute read
 • Last Updated :

  வரவிருக்கும் Realme 9 சீரிஸில் Realme 9, Realme 9i, Realme 9 Pro மற்றும் Realme 9 Pro+ உள்ளிட்ட 4 ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள் அடங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இதில் 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் Realme 9i முதலில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. சமீபத்திய அறிக்கைகள் Realme 9i-ன் முழு சிறப்பம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. இதனிடையே டிப்ஸ்டர் மற்றும் 91மொபைல்ஸ் உள்ளிட்ட பிரபல வெப்சைட்கள் Realme 9i ஸ்மார்ட் ஃபோனானது Realme Narzo 9i என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறி இருக்கின்றன.

  மேலும் Realme Narzo 9i-ன் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் புதிய தகவல்கள் வெளிப்படுத்தி உள்ளன. புதிய ரியல்மி ஸ்மார்ட் ஃபோன் 2 ரேம் மற்றும் 2 ஸ்டோரேஜ் கான்ஃபிகரேஷன்களில் வெளியிடப்படும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. புதிய Realme narzo 9i மொபைல் 4 GB / 6 GB ரேம் மற்றும் 64 GB / 128 GB ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்களில் வரும்.

  இதில் பேஸ் மாடல் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும். மற்றொரு வேரியன்ட் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் ப்ரிசம் பிளாக் (Prism Black ) மற்றும் ப்ரிசம் ப்ளூ (Prism Blue) என 2 கலர் ஆப்ஷன்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15,000-க்கு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாக அடுத்த ஆண்டுதொடக்கத்தில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Realme Narzo 9i-ன் கசிந்துள்ள ஸ்பெசிஃபிகேஷன்கள்:

  Realme 9i அல்லது Narzo 9i பஞ்ச்-ஹோல் டிசைனுடன் 6.6-இன்ச் LCD பேனல் கொண்டு வரலாம். இது ஃபுல் HD+ ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. செல்ஃபிக்களுக்காக இந்த மொபைலின் முன்பக்கம் 16 மெகாபிக்சல் கேமராவும், இதன் பின்புற கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ALSO READ |  5G Cars: 5ஜி வசதி கொண்ட கார்கள் உலக அளவில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள்...

  அதே போல ஸ்னாப்டிராகன் 680 (Snapdragon 680) சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஃபோனாக இது அறிமுகமாகலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,000mAh பேட்டரியுடன் வரலாம்.

  மேலும் பாதுகாப்பிற்காக சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனரை கொண்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை இதில் கொடுக்கப்பட போகும் கனெக்டிவிட்டி அம்சங்களாக இருக்கும்.

  First published: